திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பொம்பள விஜய் சேதுபதி தான் நான்.. விபரீத ஆசையில் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் சின்னச்சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தேடித்தேடி நடித்து வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி.

சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் தன்னுடைய கேரியரை தொடங்கி மெல்ல மெல்ல நடிகராக மாறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். தற்போதும் கூட வில்லனாகவும், மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயங்குவதில்லை.

அந்த வகையில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெண் விஜய் சேதுபதி ஆகவேண்டும் என பிரபல நடிகை கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். டஸ்கி ப்யூட்டி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்கியுள்ளார்.

குடும்ப குத்து விளக்கு கதாபாத்திரங்களை தாண்டி கவர்ச்சியிலும் கதற விட்டு வருகிறார். அதுவும் குட்டி குட்டி உடையில் நிவேதா பெத்துராஜை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

nivetha-pethuraj-cinemapettai
nivetha-pethuraj-cinemapettai

அப்படிப்பட்ட நிவேதா பெத்துராஜ் பெண் விஜய் சேதுபதி என பெயர் எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் ஹீரோயின் ஆக மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இனி வருங்காலத்தில் நிவேதா பெத்துராஜ் பொம்பள விஜய் சேதுபதி என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

Trending News