சின்னத்திரை தொலைக்காட்சியில் மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி, சிவமயம் போன்ற பல்வேறு தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதிதா தாமஸ். அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நிவேதிதா தாமஸ் போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விஜயின் ஜில்லா, கமலின் பாபநாசம், ரஜினியின் தர்பார் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிவேதிதாவை சிறிய வயதில் முதலே சீரியல்கள் பார்த்து வருவதால் தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.
ஆனால், தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிகர் பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடியது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடல், உலகில் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் எடுக்கப்பட்டது. இந்த சிகரத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே ஏற முடியும். ஆனால், நிவேதிதா தாமஸ் ஆறுமாதக் தீவிர பயிற்சிக்குப் பின், ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான 5.895 அடி மீட்டர் கொண்ட கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார்.
நிவேதா தாமஸ் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்திய தேசியக் கொடியை கிளிமஞ்சாரோவில் பிடித்துக் கொண்டு நிற்கிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிவேதிதா அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.