செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

காவேரிக்காக மணமகனாக வரும் நவீன்.. விஜய்க்கு கிளியரான ரூட், திருட்டு கல்யாணத்துக்கு தயாரான யமுனா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், யமுனா நவீனை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் காவிரி தங்கையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக நவீனுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நவீன், யமுனா என் மனதில் இல்லை. அவளை என்னுடைய மனைவியாக என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார்.

இதனைக் கேட்ட யமுனா, நவீனை விடாமல் துரத்தி பிளாக் மெயில் செய்து வந்தார். கடைசியாக நவீன் எந்த பதிலும் சொல்லாத நிலையில் தற்கொலை முயற்சி செய்து அனைவரையும் தவிக்க விட்டார். பிறகு காவேரி, இப்படியே போனால் யமுனாவை காப்பாற்றுவது ரொம்பவே கஷ்டம். யமுனா ஆசைப்பட்ட மாதிரி நவீனை எப்படியாவது பேசி சமரசம் செய்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டார்.

யமுனாவை கரம் பிடிக்க தயாரான நவீன்

அந்த வகையில் நவீனை தனியாக கூப்பிட்டு எப்படியாவது யமுனாவை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கெஞ்சி பார்த்தார். ஆனாலும் நவீன் ஒத்துக்காத நிலையில் தொடர்ந்து காவிரி, நவீனுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் ஒரு படி மேலே சென்று நவீன் எப்படியும் நான் சொன்னபடி வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் யமுனாவிற்கும் நவீனுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம் என்று காவேரி முடிவு பண்ணி விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் எது எப்படியோ நம்மளுடைய ரூட்டு கிளியர் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். கடைசியில் யமுனா சந்தோஷத்திற்காகவும், காவிரியின் சுயநலத்திற்காகவும், விஜய்யின் ஆசைக்காகவும் நவீன் பலிகாடாக சிக்கப் போகிறார். அந்த வகையில் காவிரிக்காக நவீன் யமுனாவை கல்யாணம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

அதனால் மாப்பிள்ளை கோலத்தில் நவீன், காவிரி சொன்னபடி அந்த கோவிலுக்கு வந்து விடுகிறார். அங்கே யமுனாவிற்கு திருட்டுத்தனமாக காவிரி மற்றும் விஜய் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். இது வீட்டிற்கு தெரிந்த பிறகு பிரச்சனை ஆனாலும் கடைசியில் வழக்கம்போல் இவர்களை ஏற்றுக் கொள்ளும்படி நிலைமை மாறிவிடும்.

ஆனால் நவீன், காவிரியை உருகி உருகி காதலித்ததை தவிர வேறு எந்த தவறுமே பண்ணவில்லை. அதிலும் நவீன் தான் தன்னுடைய உலகமே என்று நினைத்திருந்த ராகினியையும் நவீன் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டார். இப்படி காவிரிக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்த நவீன் அடுத்த கட்டமாக வில்லனாக மாறப் போகிறார். அந்த வகையில் காவேரி மற்றும் விஜய் சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக அடுத்த வில்லன் தயாராக போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News