அந்தரங்க வழக்கில் சிக்கிய நிவின் பாலி.. வெளியான தீர்ப்பு

nivin-pauly
nivin-pauly

Nivin Pauly : நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நிவின் பாலி. இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் பிரேமம். சாய்பல்லவியுடன் இந்த படத்தில் அவர் நடித்திருந்த நிலையில் மலையாள சினிமாவை தாண்டி மற்றும் மொழிகளிலும் நல்ல பெயர் கிடைத்தது.

தொடர்ந்து மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். உடல் எடை அதிகமாக காணப்பட்ட இவர் சமீபத்தில் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு சர்ச்சையான விஷயத்தில் நவின் பாலி சிக்கி இருந்தார்.

மலையாள சினிமாவில் நடக்கும் குற்றங்களை கண்டறிய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில் கேரளாவில் சினிமா துறையில் இருக்கும் முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. மோகன்லால் முதல் நிவின் பாலி வரை பலர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

விசாரணைக்கு வந்த நிவின் பாலி வழக்கு

இதில் நிவின் பாலி நேரடியாகவே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். என் மீது எந்த தவறும் இல்லை, நான் எங்கும் ஓடி ஒழிய மாட்டேன் என்றும் இந்த வழக்கை நேரடியாக சட்ட ரீதியாகவும் சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். மேலும் ஆறாவது குற்றவாளியாக இருந்த நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்று விசாரணைக்கு வந்தது.

அதாவது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோது நிவின் பாலி அப்போது துபாயில் இல்லை. அவர் கேரளாவில் தான் இருந்துள்ளார். இதனால் புகார் அளித்த பெண் சொன்னது போலி என்பது அம்பலமாகி உள்ளது.

இதனால் வேண்டுமென்றே நிவின் பாலி மீது பழியை போட்டுள்ளனர். இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக இப்போது நிவின் பாலி குற்றமற்றவர் என்று வெளியே வந்துள்ளார். இதேபோல் மற்ற நடிகர்களும் தவறு செய்யவில்லை என்றால் நேர்மையாக இது போன்று வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner