திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

நிவின் பாலியுடன் நடிப்பதற்கு நடிகை தேவை.. விளம்பரத்தை பார்த்து ஹீரோயினான பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவின் பாலி. அதுவும் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

தற்போது வளர்ந்து வரும் நிவின் பாலி சமீபகாலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் மூலம் பெரிய அளவு மலையாளத்தில் தனக்கென ஒரு மார்க்கெட்டை நிலை நிறுத்தியுள்ளார்.

சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் நிவின் பாலி படத்தில் நடிப்பதற்கு நடிகை தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நடிகை ஆனதாக சொல்லிய சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அது வேற யாரும் இல்லை தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

aiswarya-lekshmi-cinemapettai
aiswarya-lekshmi-cinemapettai

இவரது நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.இருப்பினும் மலையாளத்தில் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிவின் பாலி படத்தில் நடிப்பதற்கு நடிகை தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நடிகை ஆனதாகவும் அதன்பிறகுதான் அடுத்தடுத்து தனுஷ், பகத் பாசில் போன்ற நடிகர்களுடன் நடித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு மிகப் பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாகவும், மேலும் தனது நடிப்பின் மூலம் வித்தியாசத்தை காட்ட விரும்புவதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Trending News