வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்.. டிஆர்பிக்காக ரவுடித்தனத்தை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Biggboss 7: இன்று காலை பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்த பலரும் உச்சகட்ட பரபரப்போடு இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நிக்சன், அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான். அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி இப்போது கொலைவெறி தாக்குதலில் முடியும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

அதன்படி அடுத்தடுத்து வெளியான ப்ரோமோக்களில் நிக்சனின் உச்சகட்ட ரவுடித்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா வினுஷா விவகாரத்தை கையில் எடுத்தது தான்.

இதனால் கடுப்பான நிக்சன் இப்போது அர்ச்சனாவை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில் அவர் அர்ச்சனாவை பார்த்து காரி துப்பி நீ பெரிய இவளா, சரிதான் போடி, சொருகிடுவேன் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார்.

Also read: பிரதீப்பை வைத்து காய் நகர்த்திய டம்மி மம்மி.. ராஜதந்திரத்தை போட்டு கொடுத்த ஓட்ட வாய் நாராயணன்

இதனால் அதிர்ச்சி அடைந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்த வருகின்றனர். ஆனாலும் அவர் நான் ஏற்கனவே இதுக்காக மன்னிப்பு கேட்டுட்டேன். திரும்ப அதை பத்தி பேசக்கூடாது என அதிகபட்ச ஆக்ரோஷத்தில் கத்தி கூச்சலிடுகிறார்.

இவ்வளவு அக்கப்போர் நடந்தும் கூட பிக்பாஸ் நிக்சனை தடுத்து நிறுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இதை வைத்தே விஜய் டிவி டிஆர்பியை அதிகரிக்க பிளான் போட்டிருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. அதனாலயே இப்படி ஒரு ரவுடித்தனத்தை சேனல் தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் பிரதீப் விஷயத்தில் மட்டும் அவசர அவசரமாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார்கள். இதைத்தான் இப்போது ரசிகர்கள் கொந்தளிப்புடன் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரம் நிக்சனை வெளியேற்றலாம் என்று ஆடியன்ஸ் பரபரப்போடு காத்திருந்தனர்.

Also read: வினுஷா மாதரி இந்த 4 பேரை கொச்சையாக பேசிய நிக்சன்.. ஒரே நாளில் உத்தமன் ஆன காஜி தலைவன்

அதற்கு ஆப்பு வைப்பது போல் மழையின் காரணமாக ஓட்டிங்கை நிறுத்தியது விஜய் டிவி. ஆனாலும் தற்போது நிக்சனின் நடவடிக்கைகள் எல்லை மீறி கொண்டிருக்கிறது. கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பெண்களை வர்ணிப்பதும், அவதூறாக பேசுவதுமாக இருக்கும் இவர் நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு தகுதி இல்லாதவர். அதனால் இவரை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் இப்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Trending News