வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2024ன் உலக மகா உருட்டு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் போட்ட பதிவு

Biggboss 7 Nixon: இறுதி நிலையில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனை பொருத்தவரையில் யாரும் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு போட்டியாளர்கள் ஒட்டுமொத்த மக்களும் வெறுக்கும் நபர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் போட்டிருக்கும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

Also read: பிக் பாசில் கட்டம் கட்டி அடிக்கும் மாயா.. திட்டம் புரியாமல் பலிக்கிடா ஆன போட்டியாளர்கள்

கடந்த வாரம் ரவீனா, நிக்சன் இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஆடியன்சால் அதிகம் வெறுக்கப்பட்ட நிக்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர், இப்பதான் எல்லாத்தையும் பார்த்தேன். எதிர்பார்க்காத அளவுக்கு சப்போர்ட், லவ் கொடுத்த ஆடியன்சுக்கு நன்றி.

இவ்ளோ பேருக்கு என்ன புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியல. தெரிஞ்சிருந்தா என்னோட பெஸ்ட் கொடுத்து இருப்பேன். நான் கப் ஜெயிக்கணும்னு போகல. என்ன நல்லவனா காட்டிக்க போகல. நான் யாருன்னு நான் தெரிஞ்சுக்க தான் போனேன்.

Also read: காசு, பணம், துட்டு, மணி.. பிக்பாஸ் கொடுக்கும் ஆஃபர், பெட்டியை தூக்கப் போவது யாரு.?

ஆனா இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக் கொடுத்திருக்கு. கமல் சாரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி. என்னுடைய குறையை சுட்டி காட்டின ரசிகர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

எனக்கு வாய்ப்பு என்கிற வாழ்க்கையை கொடுத்த எல்லோருக்கும் நன்றி. இதை வார்த்தையால சொன்னா பத்தாது. நான் என்னோட வேலையில காட்டுறேன் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் இந்த வருடத்தின் உலக மகா உருட்டு என கிண்டல் அடித்து வருகின்றனர்.

nixon-bigoss
nixon-bigoss

Trending News