திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு உண்மையான சுயரூபத்தை காட்டிய நிக்சன்.. பெண்கள் பாதுகாப்பு இதுவா ஆண்டவரே.?

Biggboss 7: எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் இப்போதெல்லாம் மன உளைச்சலில் தள்ளப்படுவதாக சோசியல் மீடியாவில் குமுறி வருகின்றனர். அந்த அளவுக்கு டிஆர்பியை தக்க வைத்துக்கொள்ள விஜய் டிவி போட்டியாளர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது.

ஏற்கனவே மாயா அண்ட் கோ பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றியது பயங்கரமாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கமல் அந்த கூட்டத்தின் தலைவர் ரேஞ்சுக்கு சப்போர்ட் செய்தார். அது மட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என நாட்டாமையாக கொந்தளித்தார்.

ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்து வரும் நிகழ்வுகளை பார்க்கும்போது கமலை கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. பெண்கள் பாதுகாப்புக்கு நான் கேரண்டி என்று சொன்ன ஆண்டவர் இப்போது அர்ச்சனாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

Also read: பிரதீப்பை வைத்து காய் நகர்த்திய டம்மி மம்மி.. ராஜதந்திரத்தை போட்டு கொடுத்த ஓட்ட வாய் நாராயணன்

அந்த அளவுக்கு நிக்சன் தன் ரவுடித்தனத்தை பிக்பாஸ் வீட்டுக்குள் காட்டி வருகிறார். அதிலும் அர்ச்சனாவை அவர் படுகேவலமாக விமர்சித்தது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதை கமல் இந்த வாரம் கேள்வி கேட்காவிட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நற்பெயரையும் அவர் இழந்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே பிரதீப் விவகாரத்தில் அவருடைய பெயர் டேமேஜ் ஆகி போனது. இன்னும் கூட அது சரியான பாடில்லை. இந்த சூழலில் நிக்சனுக்கு அவர் ரெட் கார்டு கொடுக்காமல் போனால் அவருடைய அரசியல் வாழ்வு மட்டுமல்லாமல் சினிமா வாழ்வும் ஆட்டம் கண்டுவிடும்.

அந்த அளவுக்கு பிக்பாஸ் ஆடியன்ஸ் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆக மொத்தம் மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சுய ரூபத்தை வெளிக்காட்டிய நிக்சன் இனி ஒரு நிமிடம் கூட பிக்பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் ஆண்டவர் பெண்கள் பாதுகாப்பை மதிக்கிறார் என்று அர்த்தம் என அர்ச்சனாவுக்கு ஆதரவாக இப்போது உரிமைக்குரல்கள் ஒலித்து வருகிறது.

Also read: அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்.. டிஆர்பிக்காக ரவுடித்தனத்தை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News