நிழல்கள் ரவி பல படங்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது தனித்துவமான நடிப்பிற்கு ஒரு சில ரசிகர்கள் உள்ளனர். குணசித்திர வேடங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் தனது வலிமையான குரலால் டப்பிங் செய்து பல வெற்றிகளையும் கொடுத்துள்ளார்.
புது புது அர்த்தங்கள்: ரகுமான்,சித்ரா மற்றும் கீதா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் புது புது அர்த்தங்கள். இப்படம் அன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. ஆனால் ஆரம்பகாலத்தில் ரகுமானுக்கு ஒரு சில படங்களில் வசனம் பேச முடியாமல் தவித்து வந்தார்.
அதனால் பல இயக்குனர்கள் நடிகர்களின் குரலில் டப் செய்து படத்தை வெளியிட்டனர். அதே மாதிரி இப்படத்திற்கும் ரகுமானுக்கு பதிலாக நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
காப்பான்: சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்திருப்பார். ஆர்யா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகரான பூமன் இரானி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது கதாபாத்திரதிற்க்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இப்படம் வெற்றி பெறுவதற்கு நிழல்கள் ரவியின் குரலும் ஒரு காரணமாக அமைந்தது.
சைரா நரசிம்ம ரெட்டி: சிரஞ்சீவி நடிப்பில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் அமிதாப் பச்சன்,விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா மற்றும் நாசர் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்திற்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
பிகில்: விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது. இப்படத்தில் வில்லனாக நடித்த ஜாகி ஷெரீப்க்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
கே ஜி எஃப் 1: யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் கே ஜி எஃப். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா மற்றும் அனந்த்நாக் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.
தமிழில் வெற்றி அடைவதற்கு முழுக்க முழுக்க காரணம் நிழல்கள் ரவி என்று கூட கூறலாம். ஏனென்றால் கே ஜி எஃப் கதையை அனந்த்நாக் பிரபல நடிகையான மாளவிகாவிடம் கூறுவார். அந்த கதாபாத்திரத்திற்கு நிழல்கள் ரவி தான் டப்பிங் குரல் கொடுத்து இருப்பார். இவரது குரல் தமிழில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.