ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹாலிவுட் நடிகர் போல் இருக்கும் நிழல்கள் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு நிழல்கள் ரவி என அழைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகின

ஹீரோவாக நடித்த நிழல்கள் ரவி அதன் பிறகு பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

கே ஜி எஃப் படத்தில்கூட வெளியான பிரபல கதாபாத்திரத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து அசத்தி இருப்பார். இப்படம் தமிழில் வெற்றி அடைந்திருக்கும் இவருடைய குரலும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  படம் வெளிவந்த பொழுது நிழல்கள் ரவி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

nizhalgal ravi
nizhalgal ravi

சமீபகாலமாக பல நடிகர்களும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். அதனால் நிழல்கள் ரவி தற்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

nizhalgal ravi
nizhalgal ravi

கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ராட்சஸன் திரைப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் திருமகள் போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகர்கள் போல் நிழல்கள் ரவி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

Trending News