திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அட்ஜஸ்ட்மெண்ட்டும் வேண்டாம், உங்க சினிமாவும் வேண்டாம்.. தப்பித்து ஊருக்கே சென்ற நடிகை

தமிழ் தம்பதியினருக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை தமிழில் பல படங்களில் நடித்தாலும், அதன்பின் தமிழே வேண்டாம் என்று அக்கட தேசத்திற்கு பெட்டி படுக்கையை கட்டியுள்ளார். அம்மனி பிறந்து, வளர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தது எல்லாமே வெளிநாட்டில் தான்.

பள்ளிப்படிப்பை அங்கே முடித்தபின் மேற்படிப்பிற்காக பெங்களூர் வந்தவர் சினிமாவில் நடிக்க விருப்பம் காட்டவே, கன்னடத்தில் முதல் படத்தில் அறிமுகமானார். எப்போதுமே கன்னட நடிகைகளுக்கு, தமிழில் ஒரு மாஸ் வரவேற்பு உண்டு அந்த வகையில் தமிழுக்கு அழைத்து வரப்பட்ட நடிகை தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார்.

முதல் படமே ஊரின் பெயரைக் கொண்ட படம். அந்தப்படம் நடிகைக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் மூலமாக அம்மனிக்கு பல வாய்ப்புகள் கதவை தட்ட வே அவரும் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அடுத்தடுத்து தமிழில் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இப்படி மகிழ்ச்சியாக தமிழில் வலம் வந்து கொண்டிருந்தவர், 2019 ஆண்டுக்கு பின் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு அக்கட தேசம் நோக்கி படையெடுத்து விட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

கடைசியாக நடித்த படத்தில் அவருக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளும்படி டார்ச்சர் வந்ததாகவும், அதனால் உங்க சினிமாவே வேண்டாம் என்று வெறுத்த நடிகை இப்பொழுது வேற்று மொழிப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் நடிக்காமல் இருந்து வருகிறாராம்.

இப்பொழுது வரிசையாக தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 2020தில்லிருந்து அங்கேயே பட்டரை போட்டு நடித்து வருகிறார். இப்பொழுது மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் முடிந்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

Trending News