சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

தோனியாவது, கோலியாவது.. என் வழி தனி வழி என அறிவித்த சச்சின்

80களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிற்காக செய்த சாதனைகள் பல.

இவர் படைத்த சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, சச்சினின் தனித்துவமான சாதனைகள் என்று பார்த்தால் அது எண்ணிலடங்காதவை. தன்னுடைய 18 வயதில் இந்திய அணிக்குள் களம் கண்ட சச்சின் டெண்டுல்கர், இந்தியாவிற்காக 463 ஒருநாள் போட்டிகளிலும், 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த அனுபவம் வேறு எவருக்கும் கிடையாது.

சச்சின் டெண்டுல்கர் இப்பொழுது தனது கனவு அணி என ஒரு 11பேர் கொண்ட அணி பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் தனது நெருங்கிய தோழனான சவுரவ் கங்குலியை கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரர்களாக விரேந்திர சேவாக்கையும், சுனில் கவாஸ்கரையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதன்பின் மற்ற வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில் பிரைன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட், ஜெகுயஸ் கால்லிஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், என பேட்டிங் வரிசையை பலப்படுத்தியுள்ளார்

பந்து வீச கூடிய வீரர்கள் ஆகிய ஷேன் வார்னே, ஹர்பஜன்சிங், வாசிம் அக்ரம், மெக்ராத் போன்ற தலைசிறந்த வீரர்களையும் அவருடைய 11 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்துள்ளார்.

இப்பொழுது நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட் கோலியை அவரது அணியில் சேர்க்கவில்லை. அதுமட்டுமின்றி இந்திய அணியின் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்த அணி, இப்பொழுது கூட உலக கோப்பை வெல்லும் அளவிற்கு தகுதியுள்ள அணி.

Dhoni-Kholi-Cinemapettai.
Dhoni-Kholi-Cinemapettai.
- Advertisement -spot_img

Trending News