வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யாவிற்கு சீட் கொடுக்காத லயோலா கல்லூரி.. என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியா எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா தன்னுடைய பசுமையான கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய கல்லூரி காலம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை சூர்யா பகிர்ந்து கொண்ட காணொலி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கல்லூரியில் தனக்கு நண்பர்கள் வைத்த பட்ட பெயர் மற்றும் கல்லூரியில் செய்த குறும்புகள் என பல நினைவுகளை சூர்யா தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் லயோலா கல்லூரி தனக்கு சீட் தர மறுத்துள்ளதாகவும் சூர்யா அந்த காணொளியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “அப்போது லயோலா கல்லூரியில் 1992ஆம் ஆண்டு நான் சீட் வாங்க நின்ற போது எனக்கு சீட் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

sivakumar
sivakumar

என் தந்தை நடிகர் என்பதால், நடிகரின் வாரிசுகள் பாதியில் நின்று விடுவார்கள். அதனால் உங்களுக்கு கொடுத்து ஒரு சீட்டை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறினார்கள். அதன்பிறகு நான் தொடர்ந்து கல்லூரிக்கு வருவேன் என உறுதி அளித்த பிறகே எனக்கு சீட் கொடுத்தார்கள்” என்று கூறியுள்ளார்.

Trending News