கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ஹீரோக்களையும் கவர்ந்தவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக STR 48 படத்தை எடுக்க திட்டமிட்டு இன்றுவரை முடிவு கிடைக்காமல் சுற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார். அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு வேறு ஒரு இளம் ஹீரோவை தேர்ந்தெடுங்கள், அப்போதுதான் சரி வரும் என அறிவுரை கூறி அனுப்பி விட்டாராம்.
இந்த படம் பாகுபலி போல் சரித்திர கதையாம். அதைவிட டபுள் மடங்கு ஸ்ட்ராங்கான கதை பின்னணி கொண்ட கதை என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் கூறினார். ரஜினி நிராகரிக்க, சிம்புவிடம் இந்த கதையை கூறியுள்ளார். அதன் பின் சிம்பு நடிக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
அப்போதே இந்த படத்துக்கு 250 கோடிகள் பட்ஜெட் என நிர்ணயித்துள்ளார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் சிம்புவை வைத்து பிசினஸ் பண்ணுவது கடினம் என பட்ஜெட்டை குறைக்க சொல்லி 170 கோடியாக மாற்றினார் கமல். ஆனால் அந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என இந்த படம் கைவிடப்பட்டது.
அப்போதும் கூட இந்த கதையை விட மனதில்லாமல் இதை அஜித்திடம் எடுத்து சென்று இருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. ஏற்கனவே இந்த கதையை சிம்பு விட மனமில்லாமல் பல தயாரிப்பாளர்களை தேடி வந்தார். ஆனால் சிம்பு பிசினஸுக்கு இது செட் ஆகாது என அஜித்திடம் கதையை சொல்லிவிட்டாராம் தேசிங்கு பெரியசாமி . இதற்கு அஜித் தரப்பிலிருந்து பாசிடிவ் ரிப்ளை கிடைத்துள்ளதாம்.