வர வர செட்டே ஆகாத ஹீரோயிஸம்.. தொடர் நடிப்பால் விஜய் சேதுபதிக்கு வந்த வினை

தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டுமென்றால் நடிப்பு மட்டும் போதாது அதை அதிர்ஷ்டம் தேவை.அது இரண்டும் இருக்கும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வெற்றி அடைய முடியும். அதில் ஒருவர்தான் விஜய் சேதுபதி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கதாநாயகனாக மாறினார்.

அந்த கதாநாயகன் வாய்ப்பை வித்தியாசமான முறையில் நடித்து படத்தை வெற்றியடைய வைத்து அதனுடன் தானும் வேகமாக வளர்ந்தார். பின்னர் நடிப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்தார். பின்னர் கதைக்கு ஏற்றவாறு அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

Also Read : சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!

விஜய்சேதுபதி நடித்தால் அந்த படம் வெற்றி என்ற அடிப்படையை வைத்துக்கொண்டு தற்போது வெளிவந்துள்ள டிஎஸ்பி என்ற படம் வெளியாகி மோசமான தோல்வியையும் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தது. தமிழ்நாட்டில் இதுவரை விஜய்சேதுபதி படம் இந்த அளவுக்கு மோசமான வசூலை பெற்றிருக்கிறது.

இந்த படத்தை அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு இன்றுவரை ஒருவர் கூட உள்ளே வரவில்லையாம். இதுவரை இப்படி ஒரு நிலைமை எந்த படத்திற்கும் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் மற்ற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பார்க்கிறார்கள் அந்த அளவிற்கு மோசமாக இந்த படம் அமைந்துள்ளது.

Also Read : மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

இந்த படத்தின் தோல்வியை உண்மையாகவே விஜய்சேதுபதி எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரின் நடிப்புக்கு பிரச்சனை வரும் அளவிற்கு அவர் மீது பல விமர்சனங்கள் வந்துள்ளது. நடிக்கவே தெரியாத ஒரு நடிகர் நடித்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இவரது நடிப்பு இந்தப் படத்தில் அதேபோல் படமே எடுக்க தெரியாதவர் கூட ஒழுங்காக பாடம் எடுப்பார் அப்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

விஜய் சேதுபதி என்று வில்லனாக நடித்தாரே அன்றே அவரது அனைத்து விஷயங்களும் மாறிவிட்டது. முக்கியமாக அவர் நடிக்கும் கமர்சியல் படங்கள் அனைத்துமே தோல்வி படங்கள். இதை புரிந்துகொண்டு விஜய்சேதுபதி இனிமேல் நடித்தால் மட்டுமே அவர் சினிமாவில் நீடிக்க முடியும் இல்லை என்றால் அவர் மிகமிக ஒரு சாதாரண கதாநாயகனாக மாறிவிடும் நிலைமை உருவாகும் என்று சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

Also Read : விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி