திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்த மாதிரி காட்சிக்கு டூப் வேண்டாம்.. ரிஸ்க் எடுத்து பட்டையை கிளப்பிய சன்னி லியோன்!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்களின் கனவு கன்னியே இவர்தான்.

பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் பெரிய அளவில் ஈர்ப்பு இருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். அந்த வகையில் ஜெய் நடிப்பில் தமிழில் வெளியான வடகறி படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

தற்போது மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க தொடங்கியுள்ளார்கள்.

ஏற்கனவே மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்தில் சன்னி லியோன் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் சூட்டிங் பாதியில் நின்று வருகிறது. இந்நிலையில், தற்போது ஷீரோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சில சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது.

அதன்படி சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யும் போதே சன்னிலியோனின் மேனேஜர் இயக்குனரை தனியாக அழைத்து, சண்டைக்காட்சிகளில் நடிக்க சன்னி லியோன் ஆர்வம் காட்டுவார். ஆனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நீங்கள் அதற்காக டூப் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதை தெரிந்து கொண்ட சன்னி லியோன், தானே ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறியதோடு, அதற்காக முன்கூட்டியே கேரளா வந்து ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்தும் அசத்தி உள்ளார்.

sunny-leone
sunny-leone

சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்து டூப் இல்லாமல் தானே செய்து அசத்திய சன்னி லியோனின் தைரியத்தை படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

Trending News