இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் விஜய் வைப்பதுதான் சட்டம் என்ற உச்சத்தில் இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு செல்லப் பிள்ளையாக நடந்து கொள்வதால் அவருடைய மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மரியாதையும் செல்வாக்கும் விஜய்க்கு போதும் போதும் எனும் அளவுக்கு இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இப்போது விஜயை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் எல்லாருமே விஜய் எந்த இயக்குனரை கை காட்டினாலும் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் பட்ஜெட் விஷயத்திலும் தாராளம் தான்.
இப்படி இருக்கையில் விஜய் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் செய்ய ஆசைப்படுவது இன்னமும் தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். அப்படித்தான் தளபதி 65 படம் முதலில் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக இருந்தது.
தர்பார் என்ற படத்தின் சர்ச்சைக்கு பிறகு முருகதாஸ் விஜய் உடன் இணைவதால் விஜய் ரசிகர்களுக்கு அந்த படம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற சந்தேகம் இருந்தது. முருகதாஸின் கடைசி சில படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இப்படி இருக்கையில் விஜய் மூன்று முறை கதையில் மாற்றம் செய்யச் சொல்லியும் முருகதாஸ் பழையபடி ஒரே வட்டத்தில் சுற்றி கொண்டு இருந்ததால் இந்த படம் வேண்டாம் என ஒதுக்கி விட்டார் விஜய். அதன் பிறகு இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 66 படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த படத்திற்கு முருகதாஸ் சரியாக இருப்பார் என தயாரிப்பு தரப்பு கூறிய நிலையில் முருகதாஸுக்கு இப்போதைக்கு படம் கொடுக்கும் எண்ணம் இல்லை என விஜய் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட முருகதாஸ் செம ஃபீலிங்கில் இருக்கிறாராம்.