சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

முதல் படம் ஹிட் கொடுத்தும் பட வாய்ப்பில்லை.. கடைசியில் இப்படி ஒரு முடிவெடுத்த கார்த்திகா!

தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமாகி அன்றைய இளைஞர்களின் இதயத்தில் எளிதில் இடம் பிடித்தவர் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சில வருடங்களுக்கு முன்பு படு பிசியாக இருந்தார் கார்த்திகா நாயர்.

வழக்கம்போல் தென்னக திரையுலகம் கைகூடும் காலம் வெகு குறைவே. வருடத்திற்கு சராசரியாக 50 புதுமுக நாயகிகள் இறக்குமதியானாலும் நீடிப்பவர்கள் வெகுசிலரே அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்த அம்மணிக்கும் அப்படியான ஒரு காலமாற்றம்.

படு பிசியாக இருந்த கார்த்திகாவுக்கும் காலம் வெகுவாய் கைகொடுக்க வில்லை. படவாய்ப்புகள் இல்லாத அம்மணி இப்போது அவர் அப்பாவின் ஹோட்டலை பொறுப்பாக பார்த்து வருகிறார்.

எனினும் நல்ல கதை கதைக்களத்தோடு எவரேனும் வந்தால் ஒப்புக்கொள்வார் போலும். ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களுக்காக சில படங்களை ஒப்புக்கொள்ளலாம்.

radha-karthiga
radha-karthiga

Trending News