தமிழ் மற்றும் தெலுங்கு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரிந்து விட்டது. தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது எனவே அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
சென்னையை சேர்ந்த சமந்தா ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இரூவீட்டார் சம்மதத்துடனும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது நான்கு ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. அதன் விளைவாகவே சமந்தா அவரது சமூக வலைதள பக்கங்களில் நாக சைதன்யாவின் குடும்ப பெயரை நீக்கினார். அந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியபோது கூட சமந்தா எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.
அதேபோல் நாக சைதன்யாவும் எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் நன்றாக உள்ளோம் என கூறி வந்தார். இந்நிலையில் இருவரும் இணைந்து அவரவர் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக பிரிந்தாலும் நண்பர்களாக இருப்போம் என பதிவு செய்து விவாகரத்து குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இருவரையும் சேர்த்துவைக்க பலர் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தான் ஜீவனாம்சம் குறித்த பேச்சு தொடங்கியது. அப்போது நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜீவனாம்சம் வழங்க முன்வந்திருக்கிறது.
ஆனால் சமந்தாவோ, “நான் நன்றாக சம்பாதிக்கிறேன். எனக்கு எந்த பண உதவியும் வேண்டாம்” என கூறி அந்த பணத்தை வாங்க மறுத்திருக்கிறார். இருவரின் விவாகரத்து வழக்கும் விரைவில் நீதிமன்றத்துக்கு வர உள்ளது.