இனி இபி பில் கட்டவே வேண்டாம்.. 78000 ரூபாய் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுக்கத் தயார்

TNEB: 100 யூனிட் இலவசம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தாலும் அதற்கு மேல் ஒரு யூனிட் கூடினாலும் டபுள் மடங்கு பணம் அதிகமாகி இபி கட்டுவதற்கு ரொம்பவே அவஸ்தப்பட்டு வருகிறீர்களா? அப்படி என்றால் அவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது வீட்டிற்கு மேலே சோலார் அமைத்தால் பெரும்பாலும் வீட்டில் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும்.

அந்த வகையில் மேற்கூரை சோலார் பேனர்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு மானியம் கொடுப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி சோலார் சூரிய சக்தியின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்றும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு பரிசாக கொடுக்கும் மானியம்

வீடு உள்ளிட்ட கட்டிடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஒப்புதல் இல்லாமல் பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி இருக்கிறது. அத்துடன் மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு மானியம் பரிசாக
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம் வழங்கப்படும்.

இதன் முக்கிய குறிப்புகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். வீடுகளில் மேற்கூரை சோலார் அமைக்க வேண்டும் என்றால் தனியார் மற்றும் அரசின் உதவியுடன் தான் அமைக்க வேண்டும். மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை செலவாகும். அத்துடன் மேற்கூரையில் சோலார் வைத்துவிட்டால் நிச்சயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் மேற்கூரையில் சோலார் அமைத்திருந்தால் மாதம் மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் இருந்து 100யூனிட் கூட அவசியம் தேவைப்படாது. இருந்தாலும் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்தலாம். இதனால் 15000 முதல் 18000வரை இலவச சோலார் மின்சாரத்தில் இருந்து ஆண்டுக்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனால் அரசுக்கு மின்சார செலவு குறைவு. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் சொந்த குடியிருப்பில் இருக்க வேண்டும். மேலும் சரியான மின் இணைப்பையும் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சோலார் பேனர்களுக்கு சம்பந்தமாக வேறு எந்த மானியத்தையும் பெற்றிடாமல் இருந்திருந்தால் இந்த பரிசை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.

Next Story

- Advertisement -