வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒருத்தனும் கண்டுக்க மாட்டிங்குறாங்க! தலைவர் வாழ்க்கையில் விளையாடிய Lyca

கடந்த மாதம் திரையரங்குகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவே பலருக்கு தெரியாத அளவிற்கு உள்ளது லைக்கா ப்ரோமோஷன்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அசல் கோலார், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படம் தற்போது OTT-யில் வெளியாகின நிலையில், இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் என்று பார்த்தால், படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

ஆமாம்.. ட்ரெண்ட் ஆகவேண்டும் என்றால், ஏதாவது ப்ரோமோஷன், விளம்பரம் எல்லாம் செய்திருக்கவேண்டும். ஒன்றும் இல்லை. அலட்சியம் காட்டிவிட்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், ஞானவேலையும் குறை கூறுகிறது லைக்கா நிறுவனம்.

ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை

இதில் கூத்து என்னவென்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கே, இந்த படம் பெரிதாக பிடிக்கவில்லை. அதனால் ட்ரெண்ட் செய்யவும் இல்லை. நல்ல கன்டென்ட், நல்ல நடிப்பு இருந்தும், படத்திற்கு விளம்பரம் சரியாக இல்ல்லாததால், படத்தை மக்கள் கொண்டாடவில்லை.

இத்தனைக்கும் கன்டென்ட் பெரிதாக இல்லாத சமந்தாவின் சிட்டாடல் தொடர் கூட சரியான விளம்பரத்தால் ட்ரெண்ட் ஆனது. ஆனால், இந்த படத்தை எதோ வேண்டா வெறுப்பாக உருவாக்கியது போல லைக்கா செயல்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் இனியாவது நல்ல தயாரிப்பு நிறுவனத்திடம் போக வேண்டும்.. இல்லையென்றால், அவர் இடத்தை சீக்கிரமே டயர் 2 நடிகர்கள் பிடித்துவிடுவார்கள்.

Trending News