ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமலை ஒதுக்கிட்டு மெகா ஹிட் கூட்டணியில் இறங்கிய ஹெச் வினோத்.. எருமையை விட பொறுமை முக்கியம் அமைச்சரே

Theeran Adhigaaram Part 2: இயக்குனர் ஹெச்.வினோத் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் வல்லவர். ஆரம்ப காலங்களில் சினிமாவில் உதவி இயக்குனராகவும் சினிமாவில் வாய்ப்பு இல்லாத போது கோயம்பேடு மார்க்கெட்டுகளிலும் வேலை செய்தார் ஹெச்.வினோத்.

மனோபாலாவின் தயாரிப்பில் இவர்  இயக்கிய முதல் படமான சதுரங்க வேட்டை பலரும் எதிர்பாராத விதமாக வெற்றி படமாக அமைந்தது. அடுத்தடுத்து கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்ன ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய படங்களிலேயே தீரன் அதிகாரம் ஒன்று சிறப்பான கதை அம்சம் கொண்டது.

தமிழ்நாட்டில் அரங்கேறிய உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக 1995-2006 காலகட்டத்தில் நடைபெற்ற ராஜஸ்தானில் இருக்கும் ஒரு பிரிவினரின் திருட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு துப்பறியும் தமிழ்நாட்டு போலீசாரின் சுவாரசியமான கதையை மையமாக வைத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் வெளிவந்த படம் தீரன் அதிகாரம் ஒன்று.

Also Read: சீட்டின் நுனியில் அமர வைத்த 5 திரில்லர் படங்கள்.. ஸ்டேட் விட்டு ஸ்டேட் பொறிவைத்து பிடித்த தீரன்

இப்படத்தில் கார்த்தி, மனோபாலா, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் அபிமன்யுசிங் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் கிளைமாக்ஸ் இல் வரும் சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலை தூண்டியது எனலாம்.

சண்டை காட்சிகள் பலவும் ராஜஸ்தானை ஒட்டிய பாலைவன பகுதிகளில் எடுக்கப்பட்டது. 2017 ல் வெளிவந்த இப்படம் சிறந்த கதை, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் என பல பிரிவுகளிலும் விருதுகளை வாங்கி குவித்தது. ஹெச்.வினோத் தற்போது உலகநாயகன் கமலுடன் இணைந்து KH233 இயக்க உள்ளார். ஆனால் கமல் இந்தியன் 2, மணி  ரத்தினம் படம் என பிஸியாக உள்ளதால். எச் வினோத் இப்பொழுது ரூட்டை மாற்றியுள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முடித்த கையோடு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2 பாகம் ஆரம்பிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கார்த்தியுடன் கதை கூறியதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட  உள்ளது. இச்செய்தி கார்த்தியின் ரசிகர்களிடையே  ஆவலை அதிகரித்து உள்ளது.

Also Read: எச் வினோத்துக்கு கடிவாளம் போடும் ஹீரோக்கள்.. என் வளர்ச்சியை தடுப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்

Trending News