வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இவரை நம்பி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் கோடம்பாக்கத்தில் இல்லை.. அப்படிப்பட்ட நடிகர் யார் தெரியுமா.?

90-களில் பிரபலமான சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பல்வேறு விதமாக வளரும் மற்றும் வளர்ந்த நடிகர்களுக்கு திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பளர் தன்னோடு பிரபலங்கள் நடந்து கொண்ட விதத்தினை பட்டியலிட்டார்.

செந்தில், கவுண்டமணி வளர்ந்து வந்த காலங்களில் தங்களுடன் பயணித்த ஒரு சில சம்பவங்களையும் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். மேலும் இப்போதைய தருணத்தில் இப்படியான விடயங்கள் நடக்குமா என ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் அவரோடு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த முரளிதரன் அவரைப்போல ஒரு நடிகரை இந்திய சினிமா இது வரை கண்டதில்லை என்றும் இனி பார்க்கப்போவதும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் விஜயகாந்த சாதரனமாக பயணிக்கும் போதும் முரளிதரன் அலுவலகத்தை கடக்க நேர்ந்தால் கண்டிப்பாக அவரை பார்க்காமல் செல்ல மாட்டார் என்றும்.

என் அலுவலக படிக்கட்டுகள் சொல்லும் என கூறியிருந்தார். மேலும் விஜயகாந்தை நம்பி நஷ்டம் அடைந்த எந்த தயாரிப்பாளரையும் கோடம்பாக்கத்தில் காண முடியாது என்றும் கூறியிருந்தார். அப்படி நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படங்களில் நடித்து நஷ்டத்தை ஈடு கட்டி விடுவார் விஜயகாந்த் என்பது போன்று பாராட்டி புகழ்ந்துள்ளார் முரளிதரன்.

vijayakanth
vijayakanth

Trending News