திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ட்ரைலர்லாம் டம்மி தான்..படத்துல கதைலாம் இல்ல.. துணிவு படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சென்சார் போர்டு

தற்போது இணையத்தை திறந்து பார்த்தாலே வாரிசா, துணிவா என ரசிகர்கள் போட்டிப்போட்டு மீம்ஸ்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படமும், விஜயின் வாரிசு படமும் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே முன்பதிவு டிக்கெட் எடுக்கும் முயற்சியில் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

விஜயின் வாரிசு படம் குடும்ப பாங்கான கதை என்பதால் ட்ரைலரில் கூட அதிக மாஸ் காட்சிகளும் பெருமளவிலான வசனங்களும் இடம்பெறவில்லை. ஆனால் அஜித்தின் துணிவு படம் மாஸ் காட்சிகள், காதை பிளக்கும் துப்பாக்கி சத்தம், தெறிக்க விடும் அஜித்தின் வசனங்கள் என இணையத்தையே அதகளப்படுத்தியுள்ளது.

Also Read: அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

அஜித் மங்காத்தா படத்தில் பேசிய கெட்ட வார்த்தைகளை விட துணிவு படத்தில் இரண்டு மடங்கு கெட்ட வார்த்தைகளை அஜித் பேசியுள்ளாராம். இதன் காரணமாக துணிவு படத்தில் 17 இடங்களில் பீப் சவுண்டை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே துணிவு படத்துக்கு யு ஏ சான்றிதழை சென்சார் போர்ட் கொடுத்துள்ளது . மேலும் வாரிசு படத்துக்கு யு சான்றிதழ் மட்டும் கொடுத்து அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படமாக அங்கீகரித்துள்ளது.

தற்போது சென்சார் போர்டு இரண்டு திரைப்படங்களையும் பார்த்துவிட்டு ரிவ்யூ செய்துள்ளது. துணிவு பட ட்ரைலர் அதிரடியாக வங்கி கொள்ளை போன்ற கதைக்களத்தில் இருந்த நிலையில், ரசிகர்களிடையே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் விஜயின் வாரிசு ட்ரைலரை பார்க்க மகேஷ்பாபுவின் தெலுங்கு பட ட்ரைலர் போல் ஒண்ணுமே இல்லை என சொல்லும் அளவில் இருந்தது.

Also Read: சம்பளம் தராமல் டீலில் விட்ட தயாரிப்பாளர்.. 27 வருடங்களுக்கு முன் அஜித்துக்கு நேர்ந்த அனுபவம்

இதனிடையே இந்த இரண்டு படங்களையும் பார்த்த சென்சார் போர்டு நிறுவனம் வாரிசு படம் பல சஸ்பென்சுகள் நிறைந்த கதைக்களத்துடன் சூப்பராக உள்ளதாகவும்,. ஆனால் அஜித்தின் துணிவு படத்தில் கதையெல்லாம் இல்லையாம், வெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்சார் போர்டின் ரிவ்யூவை கேட்ட ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளார்களாம். ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து துணிவு படத்தை காட்டிலும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன்கள் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், ட்ரைலரில் ஒண்ணுமே இல்லை என்றதும் ரசிகர்கள் துணிவு பக்கம் சாய தொடங்கினர். தற்போது வாரிசு படம் துணிவை விட நன்றாக உள்ளது என்று கூறி வருவதால், மேலும் இந்த இரண்டு படங்களில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read: வாரிசு படத்தால் படாத பாடுபடும் விஜய்.. தமனால் வந்த அடுத்த பிரச்சனை

Trending News