சினிமாவில் எப்பொழுதும் அந்தந்த கேரக்டர்களை அவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு வழக்கம் உண்டு. இவர், இந்த படத்தில் இப்படி நடித்து விட்டார் அதனால் இவரை வேறுமாதிரியாக திரையில் காட்ட முடியாது என்று எண்ணி அவர்களுக்கு அதே மாதிரியான கேரக்டர்களை கொடுப்பது வழக்கம். இப்படி ஒரு முறை செய்த தவறினால் சினிமாவை விட்டு காணாமல் போன பிரபலங்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில் சம்பந்தமில்லாத கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களை, இவர்கள் போய் இந்த கேரக்டரில் நடித்து விட்டார்களே என ஏங்க செய்த நடிகைகள்.
சுரேகா வாணி: இவர் பெரும்பாலும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும் தமிழில் மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகவும் அழகானவர். தமிழில் இவர் குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். எதிர்நீச்சல், தெய்வதிருமகள், விஸ்வாசம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் இவர் மிகவும் பிரபலம். இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு தனி மார்க்கெட் உண்டு.
ஆஷா சரத்: இவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர். பெரும்பாலும் குணச்சித்திர வேங்களையே தேர்ந்தெடுக்கும் இவரையும், இளைஞர்கள் ஒரு லெவலில் வைத்துள்ளனர்.
குறும்பட லட்சுமி: இவர் லட்சுமி எனும் குறும்படத்தில் மிகவும் தைரியமாக படுக்கையறை காட்சியில் நடித்திருப்பார். அதுவரை வெளியில் தெரியாமல் இருந்த இவரை, அந்த குறும்படம் வெளியுலகிற்கு கொண்டு வந்தது. கர்ணன் படத்தில் தனுஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பவித்ரா லோகேஷ்: தெலுங்கு படத்தில் இவர் மிகவும் பிரபலம். பொதுவாக அக்கா மற்றும் அம்மா கேரக்டர்களை பண்ணும் இவர் சிறந்த துணை நடிகையாக நிறைய அவார்டுகளை வென்றுள்ளார். இவர் விஷால் நடித்து வெளிவந்த அயோக்கிய படத்தில் சில காட்சிகளுக்கு வந்து செல்வார். இன்று வரை இளைஞர்கள் ஜொள்ளு விடும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
லட்சுமி கோபாலசுவாமி: பெரும்பாலும் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் லட்சுமி கோபாலசாமி தமிழில் நடித்த அருவி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு சன் டிவியில் லட்சுமி சீரியல் தொடரில் பிரபலமானவர். அதன்பின் சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுத்த இவர், தற்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளார். இவரையும் இளைஞர்கள் இன்றுவரை ஒரு லெவலில் வைத்திருக்கின்றனர்.