விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கினார். இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டடித்து இன்று நூறாவது நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உலகளவில் இந்த படம் நல்லதொரு விமர்சனத்தை பெற்றது.
வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்து 107 கோடிகள் வசூலை வாரி குவித்தது. ஒரு திரைக்கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்பதற்கு இந்த படம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்தது. அதே போல் இந்த படத்தில் எடிட்டிங் வேலையை செய்த பிலோமின் ராஜ் பட்டையை கிளப்பிருந்தார்.
விஜய் சேதுபதி கொடுக்கப் போகும் அதிர்ச்சி
இப்பொழுது மகாராஜா படம் 100 நாட்கள் தாண்டியதை ஒட்டி ஒரு பெரிய விழா எடுக்கவிருக்கின்றனர். சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வருகிற ஆறாம் தேதி இந்த படத்திற்கான சக்சஸ் மீட் மீண்டும் ஒருமுறை நடக்கிறது. ஏற்கனவே ஐம்பதாவது நாள் சக்சஸ் மீட் நடந்து முடிந்தது. இப்பொழுது விட்டுப் போன சில ஏற்பாடுகளுக்காக நூறாவது நாளை கொண்டாட இருக்கின்றனர்.
இந்த படம் 100 கோடிக்களப்பில் இணைந்துள்ளது இதையொட்டி படத்தில் வேலை செய்த டெக்னீசியன் அனைவரையும் அழைத்து கௌரவிக்க உள்ளனர் . அவர்களுக்கு சீல்டு மற்றும் பரிசு பொருட்களை கொடுக்க இருக்கின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் சேதுபதி என்கிறார்கள்.
துவண்டு போன மார்க்கெட்டை மீண்டும் மகாராஜா படத்துக்கு பின்னர் தூக்கி நிறுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி, யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டுமென எல்லோரையும் கௌரவிக்கும் விதமாகத்தான் இந்த நூறாவது நாள் விழாவை எடுக்க உள்ளார்.
- விஜய் சேதுபதி செல்லத்துக்கு இப்படி ஒரு நிலைமையா
- ஹீரோ இமேஜுக்காக 5 கோடி சம்பளத்தை கம்மியாக்கிய விஜய் சேதுபதி
- மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ