ரஜினியை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. இந்த பொழப்புக்கு எங்கேயாவது போய் பிச்சை எடுங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் எதிர்பார்க்கும் அப்டேட் நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகமாகி வரும் நிலையில் இப்படத்தில் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக ரம்யாகிருஷ்ணன்,ஜெய் உள்ளிட்டோரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனிடையே வட இந்தியாவில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் ஒன்று நடைபெற்றது. அந்த ஆடிஷனில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Also read: சிவகார்த்திகேயனுக்காக கெஞ்சிய நெல்சன்.. விடாப்பிடியாக மறுத்த ரஜினிகாந்த்

ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரா ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் ஆடிஷன் ரஜினிகாந்தின் மகளுக்கான கதாபாத்திரத்திற்காக ஆடிசன் நடைபெற்றது. இதில் பத்து லட்சம் ரூபாய் கொடுத்து வட இந்திய பெண் ஒருவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில், திடீரென வேறு ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்ததாக செய்திகள் வெளியானது.

உடனே ஆடிஷன் எடுத்த நிறுவனத்தினர் அப்பெண்ணிடம் சென்று, இயக்குனர் ராஜமவுலி அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்கவைப்பதாகவும், மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த வாய்ப்பு எங்களால் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை சுதாரித்துக்கொண்ட அப்பெண் தான் கொடுத்த 10 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறும் , தான் நடித்தால் சூப்பர் ஸ்டாருடன் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து உள்ளார்.

Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

அதற்கு அந்த நிறுவனத்தினர் 10 லட்சம் ரூபாயை திருப்பி தர முடியாது என தெரிவித்ததுடன் அப்பெண்ணை உதாசீனப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு இந்தியளவில் பல இடங்களில் ரசிகர்கள் இருப்பினும் அவரை வைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மிகப்பெரிய நிறுவனமான வெங்கடேஸ்வரா ஃபிலிம் சிட்டி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதை கண்டு பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் ரஜினிகாந்திற்கு பல சவால்கள் இப்படம் காண்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அழகு நடிகைக்கு கொக்கி போட்ட ரஜினிகாந்த்.. தலைவரே நீங்களுமா இப்படி