தமிழில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் இதுவரை தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென நேரடி தெலுங்கு படம் ஒன்றில் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். அதன்படி விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.
மேலும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்க்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவிற்கு மலையாளத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தெலுங்கில் விஜய்க்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறைவு தான்.
இப்படி உள்ள சூழலில் விஜய் ஏன் மலையாளத்தில் படம் பண்ணாமல் தெலுங்கில் படம் பண்ணுகிறார் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் மலையாளத்தில் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட் படங்கள் தான் வெளியாகும். விஜய் வாங்கும் சம்பளத்திற்கு அந்த மாதிரியான படங்கள் அவருக்கு ஒத்துவராது.
உதாரணமாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் என புகழப்படும் மம்முட்டி, மோகன் லாலே ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடியும், 5 முதல் 8 கோடியும் தான் சம்பளமாக வாங்குகிறார்கள். இவர்கள் தவிர வளர்ந்து வரும் இளம் நடிகர்களான நிவின் பாலி மற்றும் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் முறையே 1 முதல் 2 கோடியும், 2 முதல் 2 கோடியும், 70 முதல் 80 லட்சமும் தான் சம்பளமாக பெற்று வருகிறார்கள்.
இதுதான் மலையாள திரையுலகில் அதிகபட்ச சம்பளமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விஜய் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பைலிங்குவல் படத்தில் நடிப்பதற்காக மட்டும் சுமார் 120 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் அவர் எப்படி மலையாள படத்தில் நடிக்க முடியும்? விஜய்யின் சம்பளத்தை வைத்து பார்க்கும்போது மொத்த படத்தின் பட்ஜெட் கூட வராதாம். மலையாளம் தமிழ் மொழியோடு கிட்டத்தட்ட ஒத்துப் போனது, ஏனென்றால் நாம் பேசும் தமிழ்மொழியே ஈஸியாக புரிந்துகொள்ளலாம். இதனால்கூட மலையாள படத்தை தனியாக ஒதுக்கி பார்ப்பதில்லை போல விஜய்.