வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசியா ஓடின படம் எதுவுமே தெரியல.. 10 வருடமாய் ஹிட் கொடுக்கல, கமலை வைத்து பப்ளிசிட்டி தேடும் ஹீரோ

Actor Kamal: விக்ரம் படத்திற்கு பிறகு கமல் மேற்கொள்ளும் படம் தான் இந்தியன் 2. அதிக பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இவரை வைத்து பப்ளிசிட்டி தேடும் ஹீரோவை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

லைக்கா தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தன் மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார் சித்தார்த்.

Also Read: மதுரை மண்ணில் அஜித், எதற்கு தெரியுமா.? தடபுடலான ஏற்பாடுகளுடன் தயாராகி வரும் AK

இவரும் அவ்வப்போது படங்களில் நடித்த தான் வருகிறார் ஆனால் எந்த படமும் இவருக்கு கை கொடுக்காது வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் இவர் லைம் லைட்டில் தான் இருந்து கொண்டிருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா படம் இவருக்கு ஹிட் கொடுத்தது. அதுவும் தனிப்பட்ட ஹிட் அல்ல.

அதன் பின் எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 10 ஆண்டிற்கு முன்பு மக்களால் பேசப்பட்ட இவர், தொடர்ந்து தனக்கான வாய்ப்பை இன்று வரை தேடி அலைந்து வருகிறார்.

Also Read: முரளி குடும்பத்திலிருந்து உருவாகும் அடுத்த ஹீரோ.. அஜித் பட ஹிட் இயக்குனரால் பொறாமையில் அதர்வா

என்னதான் உருண்டு, பிரண்டாலும் ஒற்ற மண்ணுதான் ஒட்டும் என்பதற்கு ஏற்ப இவரின் சினிமா பயணம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 வில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் இவரின் கதாபாத்திரம் பேசப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்தியன் 2 வில் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு, நிகழ்ச்சி ஒன்றில் கமலை புகழ்ந்து பேசி வந்தார். அதைப் பார்க்கையில், கமலின் படத்தில் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக பேசி பப்ளிசிட்டி தேடி வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. இதன் பின்னாவது இவரின் மார்க்கெட் உயருமா என்பதை இப்படம் வெளிவந்தால் தெரியவரும்.

Also Read: இந்தியளவில் ட்ரெண்டாகும் ஆபரேஷன் விஜய்.. நம்ம தளபதின்னு போய் பார்த்தா இது வேற மாதிரி புல்லரிக்க வைக்குதே

Trending News