தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தவர் அரவிந்த்சாமி. அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் சிறிது காலங்கள் சினிமா விட்டு விலகி தொழிலில் ஆர்வம் செலுத்தி வந்தார்.
ஆனால் சமீபத்தில் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக ரி-என்ட்ரி கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தளபதி, ரோஜா மற்றும் பாம்பே போன்ற படங்கள் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை கொடுத்தன. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்த அரவிந்த் சாமிக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் அதையெல்லாம் அரவிந்த்சாமி அலட்சியமாக நினைத்து ஒரு சில படங்களை தவிர்த்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது அரவிந்த்சாமி நடிக்க முடியாமல் தவிர்த்த படங்களை பற்றி பார்ப்போம்.

கமல், மாதவன் நடிப்பில் வெளியான அன்பேசிவம் படத்திலும் , கமல்-ஜெயராம் நடிப்பில் வெளியான தெனாலி படத்திலும் முதலில் இவர்களது கதாபாத்திரத்தில்( மாதவன், ஜெயராம் ) நடிக்க இருந்தது அரவிந்த்சாமி தான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அரவிந்த்சாமி இந்த இரண்டு படங்களில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இந்த படங்களில் மட்டும் அரவிந்த்சாமி நடித்திருந்தால் அடுத்த சில வருடங்கள் சினிமாவில் இவரது ஆட்சியாக மாறியிருக்கும்.

ஆனால் தற்போது தான் அரவிந்த்சாமி காலம் கடந்து பேசக்கூடிய படங்களில் நடிக்க முடியாமல் தவிர்த்து விட்டோம் என தற்போது பீல் பண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.