கர்ட்லி அம்ப்ரோஸ்: 6 அடி 7 அங்குலம், இதுவே ஒரு ஆக்ரோஷமான தோற்றம். அவரிடம் சண்டை போட்டால் நிச்சயமாக நாம் அதற்கு தகுந்த பலனை அடைய வேண்டியதிருக்கும். அவர் எளிதில் கோபபடகுடியவர் என அவர் மனைவியை கூறியுள்ளார். இவர் ஒருமுறை களத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டிவ் வாக்கிடம் மிகவும் கோபப்பட்டு சண்டை செய்துள்ளார். அவரை சமாதானம் செய்ய சக வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
டேல் ஸ்டைன்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு ஷார்ட்டெம்பர்டு என அனைவரும் கூறுகின்றனர். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த இயலாதவர்.
ரிக்கி பாண்டிங்: பார்ப்பதற்கு குழந்தை போல் இருப்பார் ஆனால் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதவர் என ஷேன் வார்னே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இயன் போத்தம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் இவர். ஒருமுறை விமானப் பயணத்தின்போது சக பயணிகளிடம் கோப பட்டு சண்டை போட்டுள்ளார்.அதைத் தடுக்கச் சென்ற இவர் சொந்த அணி வீரர்கள் இடமும் சண்டையிட்டு உள்ளார்.
சோயப் அக்தர்: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று பெயர் எடுத்த சோயப் அக்தர் மிகவும் கோபப் படக் கூடிய ஒரு கேரக்டராம். அணி வீரர்கள் கூட இவரிடம் பேச தயங்குவார்ககளாம்.
ஜாவித் மியாண்டட்: இவர் பத்திரிக்கை பேட்டியின் போதும் கூட மிகவும் காரசாரமாக தான் பேசுவாராம். களத்தில் ஒரு முறை டென்னிஸ் லில்லி என்னும் பிளேயரை கால்களால் உதைத்தே விட்டாராம்.
கௌதம் கம்பீர்: இவரைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.இவர் இப்பொழுது அரசியலில் இருக்கிறார் பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் எதிராகத்தான் பேசுவார். பாகிஸ்தான் வீரர்கள் இவரிடம் அடிக்கடி வம்பு செய்வார்கள். களத்திலும் சரி களத்திற்கு வெளியேயும் சரி தன் கோபத்தைக் காட்டி விடுவார்.
ஆன்ட்ரூ சைமன்ஸ்: இவரைப் பற்றிக் கூறவே வேண்டாம், மனிதர் பார்ப்பதற்கே படு ஆக்ரோசமாக இருப்பார். இவரிடம் வம்பு செய்தால் நிச்சயமாக நமது முதுகெலும்பை உடைத்து விடுவார்.
கிரன் பொல்லார்ட்: கிட்டத்தட்ட 7 அடி ஆக்ரோஷமானவர். இவரிடமும் வம்பு செய்தால் அதற்கு தகுந்த பதிலடி நாம் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
ஹர்பஜன் சிங்: இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒரு முறை ஸ்ரீசாந்தை கன்னத்தில் அடித்து விட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டார். கேமரா முன்பே இப்படி என்றால் இவரைப் பற்றி வெளியே கேட்கவா வேண்டும்.