செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ மட்டுமல்ல கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்.. மீண்டும் மிரட்ட வரும் டில்லி

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தை குறித்த அப்டேட் கடந்த சில நாட்களாக இணையத்தில் வெளியாகி வருகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இப்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட 60 நடத்த முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக இப்படத்தின் டைட்டில் வீடியோவில் லோகேஷ் அறிவித்திருந்தார்.

Also Read : லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய இரண்டு இயக்குனர்கள்.. ஏகே 62 படத்தின் விறுவிறு அப்டேட்

இப்போது லியோ படத்தை மட்டும் இன்றி கைதி 2 படத்தின் ரிலீஸ் தேதியையும் லோகேஷ் முடிவு செய்து வைத்துள்ளாராம். அதாவது கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இவரது டில்லி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு கைதி 2 பட வேலையை லோகேஷ் ஆரம்பிக்க உள்ளார். அதன்படி இந்த ஆண்டு 2023 இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி 2024 இறுதியில் கைதி 2 படத்தை ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். மேலும் கைதி 2 படம் லோகேஷ் எல்சியுவில் இணையும் என்று கூறப்படுகிறது.

Also Read : லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

ஏனென்றால் ஏற்கனவே விக்ரம் படத்தில் டில்லி கதாபாத்திரத்தின் குரல் மட்டும் பயன்படுத்தி இருந்தார்கள். ஆகையால் கைதி 2 படத்தில் டில்லிக்கு போட்டியாக சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 கார்த்தியின் கேரியரில் உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கைதி 2 படத்திற்காக கார்த்தி இப்போதே பல பயிற்சிகளை செய்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்ட லோகேஷ் முழு வீச்சாக லியோ, கைதி 2 படங்களை தொடர்ந்து இயக்க உள்ளார்.

Also Read : மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

Trending News