செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாட்டு மட்டும் இல்ல போஸ்டரும் காப்பி தான்.. தமன் வெளியிட்ட போஸ்டரால் ரத்தகளரியான சோசியல் மீடியா

வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சோசியல் மீடியாவில் தினம் ஒரு சண்டை அரங்கேறி வருகிறது. இதுவரை அஜித், விஜய் ரசிகர்களுக்குள் மட்டும் தான் ட்விட்டர் தளத்தில் அதிகபட்ச சண்டை வந்திருக்கிறது. தற்போது அதில் ரஜினி ரசிகர்களும் இணைந்து இருக்கின்றனர்.

அதாவது வாரிசு படத்தின் ஆடியோ பங்க்ஷன் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் நடத்தும் மாநாடு போல் நடைபெற்ற அந்த பங்க்ஷன் தான் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று கூறியது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

Also read: விஜய் எந்த இயக்குனரிடமும் காட்டாத நெருக்கம்.. அட்லீக்காக எப்பவும் கதவை திறந்து வைத்திருக்கும் தளபதி

பல வருடங்களாகவே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது எங்கள் தலைவர் மட்டும்தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் இப்படி ஒரு பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்ட பணியில் இருக்கும் போஸ்டர்

vijay-rajini-cinemapettai
vijay-rajini-cinemapettai

அதாவது நேற்று நடந்த வாரிசு பங்க்ஷனின் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை வைத்து ரெடியான போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பாட்டு மட்டும்தான் தலைவர் படத்திலிருந்து காப்பி அடிப்பீர்கள் என்று பார்த்தால் இப்போது போஸ்டரையும் காப்பி அடித்து விட்டீர்களா என்று கலாய்த்து வருகின்றனர்.

Also read: இந்தியாவிலேயே அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார், மறுத்த 3 பாலிவுட் ஹீரோக்கள்.. மறுப்பு தெரிவிக்காத விஜய்யின் பேராசை

ஏனென்றால் அந்த போஸ்டர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் போஸ்டர் போல் இருக்கிறது. அதில் ரஜினிக்கு பதிலாக விஜய்யை வைத்து போஸ்டரை உருவாக்கி இருக்கின்றனர். இதைத்தான் தற்போது ரஜினி ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் பதிலுக்கு அவர்களுடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் அஜித் ரசிகர்களும் இணைந்து போஸ்டரை கூட சொந்தமாக உருவாக்க தெரியாதா என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவே இப்போது ரத்த களரியாக இருக்கிறது. மேலும் இப்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: மொத்த லாபத்தையும் அள்ளிக் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. படம் எடுத்து சொத்துக்களை இழந்த நடிகருக்கு செய்த உதவி

Trending News