வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது என்று நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். சீரியஸான நேரங்களில் காமெடியான சில விஷயங்களை நினைத்து சிரித்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் தேவையான மன சுமையை சந்திக்க நேரிடும். இது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த வகையில் தன் வாழ்க்கையை தமாஷ் ஆகவும் காமெடியாகவும் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் வீரர்களை இதில் காண்போம்.
டேனி மோரிசன்: மனுஷன் செம ஜாலி பேர்வழி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சுற்றிக் கொண்டிருப்பவர். மைதானத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி அவரை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும் அதில் பாதி பெண்கள் தான். ஒரு முறை சியர் கேல்ஸ் பொண்ணுங்களை தூக்கிக்கொண்டு பிட்ச் ரிப்போர்ட் செய்தது உச்சக்கட்ட காமெடி.
கிறிஸ் கேல்: இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் எப்பொழுதும் குடி, குடித்தனம் என்ற பெயருக்கு எடுத்துக்காட்டாக இருப்பார். இவரை சுற்றி எப்பொழுதும் பெண்கள் கூட்டமாக இருப்பார்கள். இல்லையென்றால் இவர் பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார். வீட்டிலேயே தனக்கென்று தனியாக ஒரு பார் சுவிம்மிங் பூல் என ஜாலியாக இருப்பார்.
ஷேன் வார்ன்: இவரும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சில்மிஷ வேலைகளை செய்யக் கூடியவர் தான். மைதானத்தில் மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேவும் பலே விளையாட்டுக்காரர்தான். இவர் இக்காரணத்தினால் நிறைய முறை விமானத்தை தவர விட்டிருக்கிறார்.
பிளின்ட் ஆப்: இங்கிலாந்தைச் சேர்ந்த பிரமாதமான ஆல்ரவுண்டர் இவர். குறைந்த வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டை விட்டு குத்து சண்டை விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இவர் தண்ணி அடிக்க மாட்டார் குளித்து விடுவார். அப்படி குளித்து விட்டால் யாரிடமும் வம்பு செய்யாமல் அமைதியாக சென்று விடுவார். போலீஸ் கேஸ் எல்லாம் வாங்க மாட்டார். இவரால் யாருக்கும் தலை வழியே இருக்காது.
டுவைன் பிராவோ: மனுஷன் வேற லெவல் . இவரிடம் கெட்ட பழக்கங்கள் கிடையாது ஆனால் இவர் ஒரு ஜாலி பேர்வழி. எல்லாரிடமும் சந்தோசமாக நடந்துகொள்வார் தன்னை சுற்றி இருப்பவர்களை மிகவும் குதூகலமாக வைத்துக் கொள்வார். மைதானத்திலேயே ஆட்டம் பாட்டம் என கொண்டாடும் ஒரு விளையாட்டு வீரர். இவன் தோனிக்கு நெருங்கிய நண்பர்.