சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராஜமௌலியின் வசூலை முறியடிக்கப் போகும் படம்.. 1000 கோடிக்கு போட்ட அஸ்திவாரம்.!

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது உருவாகும் பிரம்மாண்ட படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக பாகுபலி தான் இருந்து வருகிறது. இந்த படத்தின் வசூலை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று பல படங்கள் செயல்பட்டு வருகிறது.

அவ்வாறு பாகுபலி வசூலை முறியடிக்க தற்போது இரண்டாம் பாகம் படம் ஒன்று உருவாகிறது. இப்போது படம் தொடங்குவதற்கு முன்பே ஆயிரம் கோடி வசூல் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் புஷ்பா.

Also Read : பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

இந்த படத்தில் சமந்தாவின் குத்தாட்ட பாடல் வேற லெவலில் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் புஷ்பா 2 படம் தொடங்குவதற்கு முன்பே சாதனை படைத்துள்ளது. அதாவது பல கோடி ரூபாய்க்கு ஆடியோ ரைட்ஸ் பெற்றுள்ளது.

டி சீரிஸ் நிறுவனம் புஷ்பா படத்தின் ஆடியோ ரைட்ஸை கிட்டத்தட்ட 45 கோடிக்கு வாங்கியுள்ளதாம். அதாவது ரிலீசுக்கு முன்பே இவ்வளவு கோடிக்கு ஆடியோ ரைட்ஸ் விற்ற படம் என்றால் இது தான் என்று சொல்லப்படுகிறது. இப்போதே இவ்வளவு அதிகமாக விலைக்குப் போனதால் வசூலும் நல்ல லாபத்தை பெறும்.

Also Read : மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

மேலும் புஷ்பா 2 படத்தை 250 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கான படப்பிடிப்பு 2024 கடைசியில் அல்லது 2025 முதல் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் எடுக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் ஒதுக்கி உள்ளனராம். ஏனென்றால் அவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொரு காட்சியையும் எடுக்க இருக்கிறார்கள்.

புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுனும் தயாராகி வருகிறாராம். இந்நிலையில் புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா பாடலை போல இரண்டாம் பாகத்திலும் பாடல் இருக்குமா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் பாகுபலி வசூலை புஷ்பா 2 முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : பாகுபலி உடன் ஒத்துப்போகும் தங்கலான்.. பா ரஞ்சித்துக்கும், ராஜமவுலிக்கும் இதுதான் வித்தியாசம்

Trending News