திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்.. ஆர் ஜே பாலாஜிக்கு கைகொடுக்குமா சொர்க்க வாசல்

November 29 & 30 Theatre Movie Release: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அமரன் மற்றும் கங்குவா படங்கள் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் நெகட்டிவ் விமர்சனத்தால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை.

இந்நிலையில் இந்த வாரம் 7 படங்கள் தியேட்டரில் வெளியாகிறது. அந்த வகையில் லட்சுமி மேனன் மற்றும் ஆதி பினிசெட்டி ஆகியோர் நடிப்பில் திகில் கலந்த படமாக உருவாகி இருக்கிறது சப்தம் படம். இப்படம் இந்த வாரம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மோனா பார்ட் 2 படம் வருகின்ற நவம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான பைரதி ரணங்கள் என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நானி நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சந்தோஷ் சேகரன் இயக்கத்தில் சாதுவன் படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தில் விஜய் விஷ்வா நடித்திருக்கிறார். அடுத்ததாக பழ கருப்பையா மற்றும் வையாபுரி ஆகியோர் நடிப்பில் உருவான பரமன் படமும் இந்த வாரம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. மேலும் சித்தார்த் மிஸ் யூ என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நவம்பர் 29 தியேட்டரில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் சொர்க்க வாசல். ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் இந்த வாரம் தியேட்டருக்கு வர உள்ளது.

Trending News