Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை இன்று சீமான் அறிவித்திருக்கிறார். ஜெயித்தாலும், தோத்தாலும் மீசைய முறுக்கு என்ற கெத்து தான் இப்போது நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது.
இதற்கு காரணம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தான். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை. இருந்தாலும் அந்த கட்சியினர் மார்தட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு கரும்பு விவசாய சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதே தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி ஜெயித்த ஓட்டு சதவீதத்தை வைத்து அந்த கட்சியை மாநில கட்சியாக அறிவித்துவிட்டது. இதைவிட ஒரு பெரிய வெற்றி ஒரு வளர்ந்து வரும் கட்சிக்கு என்ன இருக்கப் போகிறது.
தரமான வேட்பாளரை களம் இறக்கும் சீமான்
இதைத் தொடர்ந்து தான் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க சீமான் முடிவு செய்து இருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
அந்த தொகுதிக்கு ஜூன் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவர் அபிநயா போட்டியிட இருக்கிறார். இவர் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் நின்றார்.
ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்திருந்தால் அபிநயாவை உடனே அந்த தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக சீமான் இறுதி இருக்கிறார். அபிநயாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் ஆதரவை கவனித்துக் கூட சீமான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம்.
சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் எப்போதுமே நாம் தமிழர் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஒரு கடுமையான போட்டியை கொடுத்து தான் தோல்வி பெறும் என்பதை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த முறை மீண்டும் அபிநயாவை களம் இறக்கி இருப்பது மற்ற கட்சிகளுக்கு ஒரு நடுக்கத்தை கொடுக்க தான் செய்திருக்கிறது. எப்படி பார்த்தாலும் இது போன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும். இந்த முறை அந்த வரலாறு மாறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.