புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சவுக்கை அடுத்து கைதான சாட்டை.. ஆட்டம் கண்ட நாம் தமிழர், கொதித்து போன சீமான்

Saattai Duraimurugan: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று குற்றாலத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அதன் கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் பேசி இருந்தார்.

இந்த கூட்டத்தில் துரைமுருகன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பற்றி அவதூறாக பேசியதாக தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகனை குற்றாலத்தில் போலீசார் கைது செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொதித்து போன சீமான்

இது குறித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் துரைமுருகன் கருணாநிதியை பற்றி பேசியதற்காக கைது செய்து இருக்கிறார்கள். நானும் இப்போது பேசுகிறேன் என்னையும் கைது செய்யுங்கள்.

கிராதகன் கருணாநிதி என்று ஒரு பாட்டே இருக்கிறது, அதை தானே சாட்டை முருகன் பாடினார். தற்போது அந்தப் பாட்டை நானும் பாடுகிறேன் என சொல்லி கருணாநிதி பற்றிய பாட்டை மீடியா முன்பு பாடி காட்டினார் சீமான்.

அது மட்டுமில்லாமல் கருணாநிதி எப்படிப்பட்ட ஆள் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருப்பதால் அவரை தியாகி ஆக்க பார்க்காதீர்கள் என சாடி இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை போன்றவற்றைப் பற்றியும் சீமான் பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது படிப்படியாக குறைந்துவிட்டது தான் இது போன்ற கைதுகள் காட்டுகிறது. இப்படி ஒரு youtube பேட்டியால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோர்ட், ஜெயில் என மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறார். தற்போது சாட்டை துரைமுருகனும் இந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார்.

Trending News