சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இரண்டெழுத்து நடிகருடன் மீண்டும் ஜோடி போடும் நம்பர் நடிகை.. கெட்ட நேரத்தால் எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருந்த நம்பர் நடிகை இப்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டார். நடிகர் எது தொட்டாலும் ஃபெயிலியர் தான். சமீபத்தில் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நடிகை சினிமாவில் இருந்ததையே ரசிகர்கள் மறந்துவிடும் அளவிற்கு அவரது மார்க்கெட் சென்று கொண்டிருக்கிறது. அதனால் ஏதாவது கிடைக்கும் படங்களில் மட்டும் நம்பர் நடிகை நடித்து வருகிறார்.

Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

மேலும் இப்போதைக்கு ஒரு பெரிய பட்ஜெட் படம் ஒன்றை மட்டும் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பழைய ஹிட் காதல் படம் ஒன்றில் செட்டான ரொமான்டிக் ஹீரோவுடன் அடுத்த படத்தில் இணைய திட்டம் தீட்டி உள்ளாராம். அந்த இரண்டெழுத்து நடிகருக்கும் சமீபகாலமாக படங்கள் எதுவும் ஓடவில்லை.

இந்நிலையில் நம்பர் நடிகை சின்ன ஹீரோ என்றாலும் தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என துணிச்சலான முடிவை எடுத்துள்ளாராம். இரண்டெழுத்து நடிகரும் புளியங்கொம்பாக இருக்கிறதே என இந்த வாய்ப்பை கெட்டியாக இருக்கி பிடித்துக் கொண்டாராம்.

ஆகையால் நம்பர் நடிகை இதுவரை கெட்ட நேரம் ஆட்டி வந்த நிலையில் இந்த இரண்டெழுத்து ஹீரோவால் மீண்டும் விட்ட மார்க்கெட் துவங்கும் என ஜோசியரும் கூறியிருக்கிறாராம். இதை நம்பி அகலக்கால் எடுத்து வைக்கும் நடிகைக்கு இனியாவது தொட்டதெல்லாம் தொடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News