புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கோட், போட் என குதூகலம் தான்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 9 படங்கள்

October First week OTT Release : சமீபகாலமாக தியேட்டரில் வெளியாகும் படங்களை காட்டிலும் ஓடிடியில் என்ன படம் வெளியாகிறது என்பதை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏனென்றால் விடுமுறை நாட்களில் அங்கு, இங்கு அலையாமல் வீட்டிலேயே உட்கார்ந்து ஒரு நல்ல படத்தை பார்க்கலாம் என்பது தான் பலரது விருப்பமாக இருக்கிறது.

இந்த சூழலில் இந்த வாரம் ஓடிடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாகிறது. விஜய்யின் நடிப்பில் உருவான கோட் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. தியேட்டரில் இந்த படம் 440 கோடியை தாண்டி வசூலை அள்ளியது.

ஆனால் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடிக்கு கோட் படம் வர இருக்கிறது. கோட்க்கு போட்டியாக யோகி பாபுவின் போட் படமும் ஓடிடியில் வெளியாகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் ஆகஸ்ட் 2 தியேட்டரில் வெளியானது.

அக்டோபர் முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான படம் 35 சின்ன விஷயம் அல்ல. இந்த படம் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்ததாக அனுபம் கெர், மகிமா சௌத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது தி சிக்னேச்சர் படம்.

இப்படம் அக்டோபர் நான்காம் தேதி ஜீ5 ஓடிடி தளபதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக ஹார்ட்ஸ்ஸ்டாப்பர் சீசன் 3 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தி லெஜெண்ட் ஆஃப் மச்சினா சீசன் 3 அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஹோல்டு யுவர் பிரீத் என்ற படம் வெளியாகிறது. மேலும் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் CTRL என்ற தொடர் வெளியாகிறது. மேலும் தி ட்ரைப் என்ற படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்த வாரம் எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.

ஓடிடிக்கு வரும் விஜய்யின் கோட்

Trending News