Pa.Ranjith: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்ந்த மக்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது.
அதில் விக்ரமின் தோற்றமும் நடிப்பும் வேற லெவலில் இருந்தது. இதற்காகவே ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் படத்தின் இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஞ்சித் இதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நீதிக்காக களத்தில் குதித்துள்ளார். சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் சரணடைந்த நிலையில் விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதில் குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இப்படி இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஞ்சித் நினைவேந்தல் பேரணி நடக்க இருக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வரும் சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நீதி கேட்டு நினைவேந்தல் பேரணி நடைபெற இருக்கிறது. அதில் பல்வேறு சங்கங்கள், அமைப்பினர், தலைவர்கள் கலந்து கொள்ளும் நிலையில் பொதுமக்களும் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் அவர் அரசுக்கு எதிராக பல கேள்விகளை முன் வைத்திருந்தார். அதேபோல் நீதி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்தப் பேரணி ஒரு சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
அதாவது படம் இயக்குவதை விட்டுவிட்டு ரஞ்சித் முழு நேர அரசியலில் குதிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு வாய்ப்பும் இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நீதிக்காக போராடத் துணிந்த ப ரஞ்சித்
- சாவ துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இந்த வாழ்க்கை
- சரமாரியாக கேள்வியை எழுப்பிய பா ரஞ்சித்
- மீண்டும் மீண்டும் அரசியல் சாயம் பூசும் பா ரஞ்சித்