வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு ஓகே விஜய்க்கு நோ.. தளபதியுடன் ஜோடி சேர மறுத்த உலக அழகி

இரு பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் அஜித், விஜய் இருவரின் படத்திலும் நடிப்பதற்கு இளம் நடிகைகள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அதிலும் இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்வதற்கு நடிகைகள் மத்தியில் பெரும் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.

இது இப்படி இருக்க உலக அழகி ஒருவர் இவருடன் ஜோடி போட மறுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தமிழன். அதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். ஆனால் அவருக்கு முன்பாக முதலில் ஐஸ்வர்யா ராயை தான் பட குழு அணுகி இருக்கிறார்கள்.

Also read: அஜித்துக்கு ஒத்து வராத அந்த கண்டிஷன்கள்.. இதுவரை ஷங்கருடன் ஒத்துப்போகாத ஏகே

அதிலும் அப்படத்தின் தயாரிப்பாளரான மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வி தான் அவர் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவரை சந்தித்து படத்தின் கதையை விளக்கமாகக் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கும் கதை பிடித்துப் போனதால் ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார்.

விஜய் தான் ஹீரோ என்று கூறியதும் அவர் முடியாது என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் வியப்பாக இருக்கிறது. அதாவது விஜய் சின்ன பையன் மாதிரி இருப்பார், எனக்கு செட் ஆகாது, அஜித் ஹீரோவாக இருந்தால் ஓகே என்று கூறியிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தயாரிப்பாளர் உடனே அந்த இடத்தை காலி செய்து இருக்கிறார்.

Also read: விஜய் அஜித்துக்கு டஃப் கொடுக்கும் ஒரே போட்டியாளர்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த ஸ்டார்

ஆனாலும் ஐஸ்வர்யா ராய் விஜய்யுடன் நடிக்க மறுத்தது பெரும் அவமானமாகவே இருந்திருக்கிறது. அதன் பிறகு தான் இப்படத்தில் உலக அழகியை விஜய்க்கு ஜோடியாக போட வேண்டும் என்ற முடிவுடன் பிரியங்கா சோப்ராவை புக் செய்திருக்கிறார்கள். ஒரு விதத்தில் தளபதியின் ஆசையும் இதுதான்.

ஏனென்றால் தமிழன் படத்திற்கு முன்பே அஜித் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் உலக அழகி யுக்தாமுகி உடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். அதன் காரணமாகவே இப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க பட குழு முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அது கைகூடவில்லை. அன்று உலக அழகியால் நிராகரிக்கப்பட்ட விஜய் இன்று மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகராக சிறந்து விளங்குகிறார்.

Also read: விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

Trending News