ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ரஜினி போல் ஆக்டிவாக மாறிய பழைய ஹீரோ.. சும்மா பம்பரம் போல் சுற்றி 10 படங்களில் நடிக்கும் ஸ்டார்

சினிமா துறையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 80ஸ் 90களில் மிகவும் ஆக்டிவாக தான் நடிக்கும் படங்களில் பறந்து பறந்து, மிகவும் துரிதமாக தனது ஷூட்டிங் பணிகளை முடித்துக் கொடுப்பாராம். அந்த அளவிற்கு டிராவல் பண்ணியே ஸ்ட்ரெஸ் ஆகி பாதிக்கப்பட்டவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இதே போன்ற பானியை தற்பொழுது பழைய ஹீரோ ஒருவர் பின்பற்றி வருகிறார். 

தமிழ் சினிமாவில் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின்னாளில் ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து, பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்தான் நடிகர் சரத்குமார். இவர் தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதன் மூலம் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிஸியான அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.

Also Read: விஜய்யை கடுப்பாக்கிய சரத்குமார்.. கேட்காமல் கொள்ளாமல் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிய அவலம்

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே சுறுசுறுப்பாக தனது ஷூட்டிங் பணிகளை மிகவும் துரிதமாக முடித்துக் கொடுத்து வருகிறார். அதிலும் ஹீரோ கதாபாத்திரங்களை விடவும், குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இவர் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் தான் வாரிசு. இப்படத்தில் விஜய்-யின் அப்பாவாக நடித்துள்ளார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பத்து படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். அதுவும் ரெஸ்ட்டே இல்லாமல் பம்பரம் போல் சுற்றி நடித்து வருகிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

தற்பொழுது இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் படத்தில் இவருடைய கெட்டப் ஆனது செம்ம மிரட்டல் ஆக உள்ளது. போஸ்டரில் இவரின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் சரத்குமாரா இது என்று வாயடைத்து போய் உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தற்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு காலையில் சென்னை, மாலையில் ஹைதராபாத் மற்றும் மதியம் லன்ச் மதுரை என உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றி சுற்றி தனது படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: ரம்மி சரத்குமாரிடம் காதல் லீலையில் சிக்கிய 4 நடிகைகள்.. சினிமாவுக்கு கும்மிடு போட்டு ஓடிய ஹீரோயின்

Trending News