Vijay and Ajith: என்னதான் அஜித் விஜய் இருவரும் சிறந்த நண்பர்கள் எங்களுக்கு போட்டி மட்டும் இருக்கிறது. பொறாமை என்பது கிடையாது என்று சொன்னாலும் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் போட்டி பொறாமை இருந்து கொண்டே தான் வந்தது. அதிலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் என் ஹீரோ தான் பெருசு என்று சண்டை போட்டு மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் எடுத்த முடிவு அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் ஒன்றாக இணைக்கும் விதமாக அமைக்கப் போகிறது. அதாவது விஜய், சினிமாவில் ஜெயித்ததை அடுத்து அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நின்னு ஆட்சியைப் பிடிக்க தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் மூலம் செயல்பட்டு வருகிறார்.
சம்பவத்திற்கு தயாராக இருக்கும் கோட் மற்றும் குட் பட் அக்லி
இதனால் கடைசியாக நடித்த கோட் படமும் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டார். அதனால் போற போக்கில் நமக்கு இவ்வளவு நாளாக டஃப் கொடுத்து, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு ஒரு காரணமாக இருந்த அஜித்துக்கு கை கொடுத்து விட்டுப் போகலாம் என்று தளபதி முடிவு எடுத்து விட்டார்.
அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் இனி சத்தியமா குடிக்க கூடாது என்று வரும் டயலாக் மங்காத்தா படத்தில் அஜித் பேசியிருக்கிறார். அதை டிரைலரில் பார்க்கும் பொழுதே இரண்டு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து விட்டது. அதே மாதிரி படத்தில் இன்னொரு மேஜிக்கும் இருக்கிறது. அதாவது கோட் படத்தில் அஜித் பேசுற மாதிரி ஒரு சில காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பட் அட்லி படத்திலும் ஒரு சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். கண்டிப்பாக இதை திரையரங்கில் பார்க்கும்போது ரசிகர்கள் ஆரவாரப்படுத்தி கொண்டாடும் அளவிற்கு ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
இந்த ஒரு தருணத்திற்கு தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு படங்களிலும் மிகப்பெரிய மேஜிக் நடக்கப் போகிறது. அந்த வகையில் விஜய் போற போக்கில் அஜித்துக்கு கை கொடுத்து தூக்கி அனைத்து ரசிகர்களையும் சந்தோஷப்பட வைத்து தன்னுடைய ரசிகர்களும் அஜித்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று மறைமுகமான ஒரு மெசேஜை கொடுத்து விட்டார்.
இன்னொரு பக்கம் விஜய், அரசியலுக்குள் நுழைந்ததும் ரஜினி மொத்தமாக ஆளும் கட்சிக்கு சப்போர்ட் செய்து வரும் சம்பவம் மூலம் ரசிகர்களை திசை திருப்பி வருகிறார் என்ற பேச்சுக்களும் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் சினிமாவில் ரஜினியின் ஆட்டத்தை குறைக்கும் விதமாக போகிறபோக்கில் அவரை கவுக்கும் விதமாக விஜய் அவருடைய ரசிகர்களுக்கும் மறைமுகமாக மெசேஜ் மூலம் கூறிவிட்டார். இதுல இருக்கும் உள்குத்து நல்லதோ கெட்டதோ, ஆனால் அஜித் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு படங்கள் மூலம் மிகப்பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.
- Vijay : தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கூட்டணியா.?
- வெங்கட் பிரபு செய்யும் தில்லாலங்கடி வேலை
- GOAT படத்தில் விஜயகாந்த் வருவாரா இல்லையா.?