வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

GVM: ஒரே படத்தால் பெயரை கெடுத்து கொண்ட கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரத்தையும் ஜொலிக்காமல் செய்த துரதிஷ்டம்

கௌதம் மேனன் மிகவும் ஸ்டைலிசான இயக்குனர். காதல் படங்களை எடுப்பதில் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை இன்று வரை கடைபிடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை விளக்கும்.

அப்படிப்பட்ட பெயர்களை வாங்கிய இயக்குனர் இன்று தான் எடுத்த ஒரு படத்தால் மொத்த பெயரையும் இழந்துள்ளார். இவரின் அடுத்த படங்களுக்கும் இவர் எடுத்து வைத்திருக்கும் படங்களுக்கும் அந்த படம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

துருவ நட்சத்திரத்தையும் ஜொலிக்காமல் செய்த துரதிஷ்டம்

கௌதமேனன் கடைசியாக எடுத்த படம் “ஜோஸ்வா” இந்த படத்தை தயாரித்தவர் ஐசரி கணேஷ். இதனால் இவருக்கு கிட்டத்தட்ட 15 கோடிகள் வரை நஷ்டமாகியுள்ளது. இதனை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார். இந்த படத்தை எடுத்ததன் மூலம் தான் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பெயரையும் இழந்துவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன்.

“ஜோஸ்வா” இந்த படத்தின் ஹீரோ வருண். வனமகன், எல் கே ஜி, கோமாளி, சீறு போன்ற படங்களில் நடித்தவர். இவர் தயாரிப்பாளர் ஐசரி கணேசின் மருமகன். இவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெறலாம் என்று எண்ணியவருக்கு பெரும் அடியாக அமைந்தது ஜோஸ்வா படம்.

இந்த படம் தான் இப்பொழுது கௌதம் வாசுதேவனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. கௌதமிடம் சரக்கு தீர்ந்து விட்டது, இல்லை என்றால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டார் என்றும் கூறி வருகின்றனர். இந்தப் படத்தை மதிப்பில் எடுத்து விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படமும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறது.

Trending News