Leo Vijay: இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி உள்ள படம் தான் லியோ. விஜய், திரிஷா, சஞ்சய் தத் என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சூழலில் கதையைப் பாதுகாப்பதில் லோகேஷ் எப்போதுமே கவனத்துடன் இருப்பார். ஆனால் இப்போது அவர் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் லியோ படத்தின் கதை இணையத்தில் கசிந்து விட்டது. இதனால் மிகுந்த கவலையில் லோகேஷ் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள்.
Also Read : விஜய் அரசியலுக்கு வந்தால் விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. உங்க கப்பலே கவுந்து கிடக்கு இதுல இப்படி உருட்டா!
அதாவது லியோ படத்தின் ஒன் லயன் ஸ்டோரி இது தான் என்று ஒரு விஷயம் பரவி வருகிறது. 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யின் படத்தில் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். லியோ படத்தில் இருவரும் கணவன், மனைவியாக தான் நடித்துள்ளார்களாம். ஆரம்பத்தில் ஒரு காபி ஷாப் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் விஜய்.
அதுவம் விஜய் பார்த்திபன் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார். அப்போது மாபியா கும்பலால் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர்களிடம் விஜய் சண்டையிடும் போது இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் பரவுகிறது. இதனால் விஜய்யின் இருப்பிடம் அவரது முன்னாள் எதிரிகளுக்கு தெரிய வருகிறது.
Also Read : விஜய்யின் வேகத்தை குறைத்து சமாதானப்படுத்தும் பெருந்தலைகள்.. ஆரம்ப புள்ளியோடு வைக்க போகும் முற்றுப்புள்ளி
இதன் காரணமாக ஃபிளாஷ்பேக் காட்சி செல்கிறது. அதனால் ஏற்படும் விளைவு தான் லியோ படத்தின் மொத்த கதையாம். அதிலும் திரிஷா மற்றும் விஜய் இடையே ஆன காட்சிகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. அதிகமாக ஆக்ஷன் காட்சிகள் தான் படத்தில் இடம் பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நிறைய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கும் சரியான காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்பதால் எடிட்டிங் வேலையில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று லோகேஷ் உறுதியாக இருந்த நிலையில் இப்போது கதை கசிந்தது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read : பட்ட அவமானங்களை படமாக்கும் தளபதி 68.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம் துணிந்து நிற்கும் விஜய்