தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் படங்களை இயக்கியுள்ளனர். ஆனால் அதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அப்படி ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு அதன் பிறகு காணாமல் போன இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.
ருத்ரய்யா
அவள் அப்படித்தான் படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ருத்ரய்யா இயக்கியிருந்தார். ஆனால் அதன்பிறகு இவர் என்ன ஆனார் எங்கே போனார் என்று கூட தெரியவில்லை.
நிவாஸ் கே பிரசன்னா
அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் தெகிடி. இப்படத்தை இயக்கிய நிவாஸ் கே பிரசன்னா அதன்பிறகு எந்த ஒரு படமும் எடுக்கவில்லை கிட்டத்தட்ட 7 வருடங்கள் மேலாகியும் எந்த படமும் எடுக்காமல் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.
விக்ரம் சுகுமாரன்
கதிர் நடிப்பில் வெளியாகி முதன் முதலில் வெற்றி கொடுத்த திரைப்படம் மதயானை கூட்டம். இப்படத்தில் ஓவியா ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் அதன்பிறகு எந்த ஒரு படமும் இயக்கவில்லை.
பாலசேகரன்
லவ் டுடே என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் பாலசேகரன். இப்படம் வெளிவந்த போது அனைத்து இளைஞர்களும் துள்ளி குதித்த காலமது. ஆனால் இன்றுவரை இவர் என்ன ஆனார் ஏன் படங்களை இயக்க வில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.
பாலு
காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது இப்படத்தை பாலு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு உன்னுடன் என்ற படத்தை எடுத்தார் அப்புறம் இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
பிரவீன் காந்த்
ரட்சகன் மற்றும் ஜோடி போன்ற படங்களை இயக்கிய பிரவீன்காந்த் துள்ளல் என்ற தோல்வி படத்தை கொடுத்ததன் மூலம் சினிமாவை விட்டு நிரந்தரமாக விலகி விட்டார்.
ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்புறம் மஜ்னு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன்பிறகு எந்த படம் இயக்காமல் உள்ளார்.
சரவண சுப்பையா
சிட்டிசன் மற்றும் ABCDஆகிய இரண்டு படங்களையும் இயக்கியவர் சரவண சுப்பையா. அதன் பிறகு இவர் எந்த ஒரு திரை படத்தையும் இயக்கவில்லை.
ஆர்டி நேஷன்
விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தை ஆர்டி நேஷன் இயக்கியிருந்தார். இப்படம் ஓரளவுக்கு ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் அதன்பிறகு இவர் எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை.