சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

காதலிக்க ஒரு ரேட், கல்யாணம் செய்ய ஒரு ரேட்.. அந்தரங்க மயக்கத்தில் நடிகரிடம் ஏமாந்து போன நடிகை

சக நடிகைகளிடம் காதல் வலையை வீசுவதையே சில நடிகர்கள் வேலையாக வைத்திருப்பார்கள். அதில் உண்மையாக காதலித்து திருமணத்தில் இணைந்த எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகர் பணத்திற்கு ஆசைப்பட்டு நடிகையை காதலித்து ஏமாற்றிய விஷயம் பலருக்கும் தெரியாது.

இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வந்தவர் தான் அந்த நடிகர். மண்மனம் மாறாத இயக்குனரின் கண்டுபிடிப்பான அந்த நடிகர் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்தது. இதனால் வெகுவிரைவிலேயே முன்னணி நடிகர் அந்தஸ்தையும் அவர் பெற்றார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கிடைக்கல.. சின்னத்திரையே எவ்வளவோ மேல், வாய் கூசாமல் புழுகும் ஐட்டம் நடிகை

இப்படி நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சக நடிகைகளுக்கு காதல் வலை வீசுவதையும் ஒரு வேலையாகவே அவர் வைத்திருந்தார். அப்படித்தான் பிரபல நடிகை ஒருவரையும் அவர் விடாமல் துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் இவருடைய புத்தி தெரிந்ததோ என்னவோ அந்த நடிகை அவரிடம் சிக்காமல் எஸ்கேப் ஆனார்.

அவருக்கு அடுத்தபடியாக வலையில் சிக்கியவர் தான் ஜெயமான நடிகை ஒருவர். நடிகரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவரின் காதல் வலையில் விழுந்த அந்த நடிகை கேட்கும்போதெல்லாம் அவருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிகை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகரை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Also read: 42 வயது ஆன்ட்டியால் போண்டியான நடிகர்.. வெளிச்சத்திற்கு வந்த அந்தரங்க நெருக்கம், பறிபோன வாய்ப்பு

அதனால் சுதாரித்துக் கொண்ட நடிகர் இன்னும் பல லட்சம் பணம் கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். காதலிக்கும் போதே சொத்துக்களை இழந்த நடிகை கல்யாணத்திற்கும் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா என்று ஆத்திரப்பட்டிருக்கிறார். மேலும் நடிகருடன் தனக்கு இருந்த காதலையும் அவர் அத்துடன் முறித்து கொண்டாராம்.

அதன் பிறகு வேறு நடிகை பக்கம் காதல் அம்பை வீச ஆரம்பித்த அந்த நடிகர் பிறகு கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அந்த நடிகர் திரைத் துறையில் இருந்து விலகி இருந்தாலும் அவருடைய காதல் லீலைகள் பற்றிய பேச்சு இப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காதலுக்கு ஒரு ரேட் கல்யாணத்திற்கு ஒரு ரேட் என்று வலம் வந்த இந்த நடிகர் காதல் மன்னர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போயிருக்கிறார்.

Also read: புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

Trending News