சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ஒரு வழியா விவாகரத்து பிரச்சனை முடிஞ்சிடுச்சு.. மாமியை சமாதானப்படுத்திய நடிகர்

இந்த வருட ஆரம்பத்திலேயே பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஒரு விஷயம் என்றால் அது பிரபல நடிகரின் விவாகரத்து செய்தி தான். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அந்த நடிகர் பல மொழிகளிலும் நடித்து அசத்தி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் காதலித்து, திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்ற அந்த நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்தது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய வீட்டு மாப்பிள்ளையான அவர் இப்படி ஒரு முடிவெடுத்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

நடிகரின் மனைவி கூட இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். ஆனால் அவரின் அம்மாவோ நடிகர் மீது தீராத கோபத்தில் இருந்தார். அதனாலேயே கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் அந்த தயாரிப்பாளரிடம் நடிகருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறி வந்தார்.

தயாரிப்பாளரும் அதற்கு சில பல வேலைகளை செய்ததாக தகவல்கள் வந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எந்த தயாரிப்பாளர் நடிகரை ஒழிக்க நினைத்தாரோ அவரே இப்பொழுது நடிகரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.

Also read:பெண் இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கம்ப்ளைன்ட் செய்ததால் வீட்டுக்கு அனுப்பிய தயாரிப்பாளர்

இதன் மூலம் பிரச்சினை சரியாகி விட்டதா என்று பலரும் கேட்டு வந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. என்னவென்றால் நடிகர் படாத பாடுபட்டு தன்னுடைய மாமியாரை சமாதானம் செய்து விட்டாராம். அதன் பிறகு தான் இந்த பட அறிவிப்பே வந்ததாம்.

மேலும் நடிகரின் மனைவியும் தற்போது இந்த சமாதான தூதுக்கு இறங்கி வந்திருக்கிறாராம். அவர்கள் இருவரும் இணையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read:ஓலா, உபர் கூட இவ்வளவு கேக்க மாட்டாங்க.. கிலோமீட்டருக்கு 20 ரூபாய் சம்பளம் கேட்ட பாஸ்கி நடிகர்

Trending News