திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு வழியா விஜய்க்கு கிடைத்த அப்பாயின்மென்ட்.. லாஸ் ஏஞ்சல்ஸில் இளைய தளபதி செய்யும் போக்கிரித்தனம்

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்து ஆடியோ லான்ச் விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறுவதற்கு மும்மரமாக பட குழுவில் உள்ள அனைவரும் வேலை பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த முறை ஆடியோ லான்ச் மலேசியாவில் நடத்தலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். அடுத்ததாக இவருடைய 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான வேலைகளை மெது மெதுவாக துவங்க இருக்கிறார்கள். மேலும் விஜய்,வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி மேனேஜர் ஜெகதீஷ் இவர்கள் அனைவரும் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சென்றார்கள்.

Also read: அஜித்துக்கு இருக்கும் ஒழுக்கம், விஜய்க்கு இல்லை.. பொறுப்பில்லாமல் நடித்த தளபதிக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்

அங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறார்கள். அவர்கள் எந்த காரணத்திற்காக போனார்களோ அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் ஒரு வாரம் கழித்து தற்போது தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது 30-31 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறார்கள்.

அது என்ன காரணத்திற்காக என்றால் ஒரு புதிய VFX டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டுவதற்கு ஸ்கேனிங் செய்து அவரை மாற்றுவதற்காக. இந்த வேலையை செய்வதற்காக தான் இவர்கள் அனைவரும் ஒரு வாரமாக அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.

Also read: லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

தற்போது அப்பாயிண்ட்மெண்ட் உறுதியான நிலையில் இன்னும் இரு தினங்களில் அதற்கான வேலைகள் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இதே மாதிரி இந்த டெக்னாலஜியை தான் கமல் அவருடைய இந்தியன் 2 படத்திற்கு பயன்படுத்தி இளமையாக மாறுவதற்கு அந்த இடத்திற்கு தான் சென்றார்.

அதேபோல் விஜய்யை இப்படத்தில் இளமையாக காட்டுவதற்கு இதே டெக்னாலஜியை பயன்படுத்துகிறார்கள். தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் அவர்களுடைய தோற்றத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே நடித்து ரசிகர்களிடமிருந்து வரவேற்பை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் விஜய் இந்த மாதிரி போக்கிரித்தனம் செய்து வருகிறார்.

Also read: விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

Trending News